Sivakarthikeyan: ஈட்டியாக குத்திய துரோகம்.. இரண்டாக பிரிந்த ஒரு துருவம்.. சிவகார்த்திகேயன் - தனுஷ் பிரிந்த கதை!
Sivakarthikeyan: அப்போதுதான் சிவகார்த்திகேயனின் பெயர் அவரது காதிற்கு வருகிறது. இந்த நிலையில் தனுஷ் தரப்பிலிருந்து சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்கிறார்கள். - சிவகார்த்திகேயன் - தனுஷ் பிரிந்த கதை!
(1 / 5)
Dhanush Sivakarthikeyan: நடிகர் தனுஷூக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே விழுந்த விரிசல் குறித்து,பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி, ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.விசுவாசி சந்தானம்: இது குறித்து அவர் பேசும் போது, “நடிகர் தனுஷ் 3 படத்தை எடுக்கும் பொழுது அந்தப் படத்தில், நகைச்சுவைக்கென்று ஒரு கேரக்டர் இருந்தது. அந்த கேரக்டரில் நடிக்க நடிகர் சந்தானத்தை கமிட் செய்து இருந்தார் தனுஷ்.
(2 / 5)
சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து சினிமாவே பொறாமை கொள்கிறது. திடீரென்று ஒருத்தன் இப்படி வளர்ந்தால் எப்படி அவர்களால் அதை ஒத்துக் கொள்ள முடியும். இதனால் சிவா மீது பல கட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் தான் ஒரு சினிமா பின்னணி உள்ள ஒரு தயாரிப்பு நிறுவனம் சிவகார்த்திகேயனை கூப்பிட்டு நான்கு படங்கள் செய்வதற்கான அட்வான்ஸ் தொகையை கொடுத்து நாம் படம் செய்யலாம் என்று கையெழுத்து வாங்கியது.
(3 / 5)
பாண்டிராஜ் சொன்ன அட்வைஸ்இந்த நிலையில், அந்த படத்தின் இயக்குநர் பாண்டிராஜ், 3 படத்தில் கமிட்டாக வேண்டாம். ஏனென்றால், மெரினா திரைப்படத்தில் ஹீரோ வேஷம். அந்த திரைப்படத்தில் காமெடி வேஷம். அந்தப் படத்தில் நீ நடித்தால், உன்னை காமெடியனாகவே முத்திரை குத்தி விடுவார்கள். ஆகையால் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் முழு கவனத்தை செலுத்து என்று அறிவுரை கூறினார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. சிவகார்த்திகேயன் 3 படத்தில் கமிட் ஆகிவிட்டார். 3 படம் வெளியானது.
(4 / 5)
தியேட்டரில் சிவகார்த்திகேயன் வரும் காட்சிகளை ரசிகர்கள் கைத்தட்டி கொண்டாடினர். இதையடுத்து தனுஷ் சிவகார்த்திகேயனுக்கென்று ஒரு கூட்டம் உருவாகி கொண்டு இருக்கிறது என்பதை கரெக்ட்டாக கணித்து, அவரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார். அந்த திரைப்படம் தான் எதிர்நீச்சல். அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
(5 / 5)
காலப்போக்கில் நாம்தான் சிவாவை ஹீரோவாக்கி இருக்கிறோம். ஆகையால் அவர் தன் பேச்சைக் கேட்டு தன் கைக்குள் இருப்பார் என்று தனுஷ் எதிர்பார்த்தார். ஆனால் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து, தனுஷை அவர் நிராகரிக்கும் இடத்திற்கு சென்று விட்டார். இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் தனுஷின் அலுவலகத்திற்கு எதிரே, சிவகார்த்திகேயன் ஒரு அலுவலகம் வைத்து இருக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். சினிமா அப்படித்தான் அவரை உருவாக்கியிருக்கிறது. கிட்டத்தட்ட இது அமைதிப்படை அமாவாசை கதை போலதான்” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்