"அரசியல் அராஜகம் ஒழிக. நீதி வெல்லட்டும்" நீதிபதியிடம் மன்றாடிய கஸ்தூரி..ஜாமின் மறுப்பு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "அரசியல் அராஜகம் ஒழிக. நீதி வெல்லட்டும்" நீதிபதியிடம் மன்றாடிய கஸ்தூரி..ஜாமின் மறுப்பு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

"அரசியல் அராஜகம் ஒழிக. நீதி வெல்லட்டும்" நீதிபதியிடம் மன்றாடிய கஸ்தூரி..ஜாமின் மறுப்பு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 17, 2024 05:48 PM IST

நீதிமன்றத்துக்கு செல்ல வேன் ஏறும் முன் அரசியல் அராஜகம் ஒழிக. நீதி வெல்லட்டும் என்று முழக்கமிட்டார் நடிகை கஸ்தூரி. பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் நான் ஒரு சிங்கிள் மதர், சொந்த ஜாமினில் விடுவிக்குமாறு நீதிபதியிடம் மன்றாடியதாக கூறப்படுகிறது.

"அரசியல் அராஜகம் ஒழிக. நீதி வெல்லட்டும்" நீதிபதியிடம் மன்றாடிய கஸ்தூரி..ஜாமின் மறுப்பு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
"அரசியல் அராஜகம் ஒழிக. நீதி வெல்லட்டும்" நீதிபதியிடம் மன்றாடிய கஸ்தூரி..ஜாமின் மறுப்பு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

இந்த வழக்கு தொடர்பாக கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவாகியிருந்த நடிகை கஸ்தூரி, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

போலீசார் விசாரணை

ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். இதன் பின்னர் சிந்தாதரிபேட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் தெலுங்கு மக்கள் குறித்து இழிவாக பேசியதன் பின்னணியில் யாரும் இருக்கிறார்களா?, அவரை இப்படி பேச சொல்லி யாரும் தூண்டினார்களா? என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பின் அவர் நீதிமன்றம் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டார்.

முழக்கமிட்ட கஸ்தூரி

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரியை ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றபோது, வேனில் ஏறுவதற்கு முன் காவல் நிலைய வளாகத்தில் கூடியிருந்த பத்திரிகையாளர்களை பார்த்து அரசியல் அராஜகம் ஒழிக. நீதி வெல்லட்டும் என முழக்கமிட்டார். இதன் பின்னர் அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதையடுத்து கஸ்தூரிக்கு நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரியை புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

மன்றாடிய கஸ்தூரி

நீதிமன்ற விசாரணையின்போது நீதிபதியிடம், "நான் ஒரு சிங்கிள் மதர். எனக்கு மகன் இருக்கிறான். அதனால் சொந்த ஜாமினில் விடுவிக்குமாறு" கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் பதிவு செய்யப்பட்டிருக்கும் எஃப்ஐஆர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், அகில் இந்தியா தெலுங்கு சமமேளனம் தலைவர் நந்தகோபால் அளித்த புகாரின் பேரில் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசியதால் தங்கள் மிகவும் புண்பட்டுள்ளோம். தெலுங்கர்கள் - தமிழர்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக மிகவும் கொச்சையான வார்த்தைகளால் அவர் பேசியுள்ளார். கஸ்தூரியின் பேச்சால் வெளியே செல்லும் போது சிலர் சினிமா பாடல் பாடி விமர்சிக்கின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஸ்தூரி எதிரான வழக்கு

கஸ்தூரிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மதுரை திருநகர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதவிர சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளிலும், திருச்சியில் 3 பிரிவுகளிலும், தேனி மாவட்டம் ஆன்டிப்பட்டி காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடந்து கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவான கஸ்தூரி முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த கஸ்தூரி கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் அவரை கைது செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு அங்கு மீண்டும் சொந்த ஜாமினுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.