Big Breaking : 200 பேரிடம் விசாரணை.. எழும்பூர் நீதிமன்றத்தில் பரபரப்பு.. சென்னை மெட்ரோவில் இளம் பெண் புகார்!
- அக்டோபர் 28 ம் தேதியான இன்று காலை வரை அறிய வேண்டிய முக்கியமான பிரேக்கிங் செய்திகளின் தொகுப்பு இதோ. சுருக்கமாக அவசியம் அறிய வேண்டிய செய்தியின் தலைப்புகள் இதோ.
- அக்டோபர் 28 ம் தேதியான இன்று காலை வரை அறிய வேண்டிய முக்கியமான பிரேக்கிங் செய்திகளின் தொகுப்பு இதோ. சுருக்கமாக அவசியம் அறிய வேண்டிய செய்தியின் தலைப்புகள் இதோ.
(2 / 6)
சிகிச்சையில் அலட்சியம் என்ற குற்றச்சாட்டில் செவிலியர்களை கைது செய்வதற்கு முன்பு மருத்துவ நிபுணர்களின் கருத்தை போலீசார் கட்டாயம் கேட்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை தொடர்பாக செவிலியர்களை கைது செய்ய ஒரு புகார் போதுமானது என்ற முடிவை போலீசார் கைவிட வேண்டும் என்றும் கருத்து. File Photo(PTI)
(3 / 6)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குரங்காத்துப் பள்ளம் பகுதியில் பைக்கில் கள்ளச்சாராயம் கடத்திய 28 வயதான தங்கராசு என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து 128 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அந்த ஊறல் அழிக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
(4 / 6)
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக 200 பேரிடம் போலீசார் விசாரணை. சந்தேகிக்கும் வகையில் விபத்து நாளில், விபத்து நடந்த பகுதியில் மொபைல் போன், வாட்ஸ்ஆப், டெலிகிராம் உள்ளிட்டவற்றில் பேசிய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.(ANI)
(5 / 6)
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 28 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர். கொலை வழக்கில் 30 பேர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சமீபத்தில் சென்னை காவல்துறை தாக்கல் செய்தது. தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நகலை இன்று கைதானவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
(6 / 6)
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளம்பெண்ணை ரகசியமாக புகைப்படம் எடுத்த பெரம்பூரைச் சேர்ந்த 50 வயதான ஜெயகிருஷ்ணன் என்பவர் கைது. நந்தனம் மெட்ரோ நிலையம் அருகே வரும் போது, அதை உணர்ந்த இளம் பெண், உடனே 100 அவசர அழைப்புக்கு போன் செய்து புகாரளித்துள்ளார். அந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்தனர். ஜெயகிருஷ்ணனின் செல்போனை சோதனை செய்ததில் ஏராளமான பெண்களின் புகைப்படங்கள் இருந்தது, கண்டுபிடித்து. அது குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை.(HT_PRINT)
மற்ற கேலரிக்கள்