Kalki 2898 AD OTT Release: ஆயிரம் கோடி ரூபாயை வேட்டையாடிய கல்கி கி.பி.2898 - எப்போது ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?-do you know when kalki ad 2898 which hunted thousand crores of rupees will be released in ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kalki 2898 Ad Ott Release: ஆயிரம் கோடி ரூபாயை வேட்டையாடிய கல்கி கி.பி.2898 - எப்போது ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

Kalki 2898 AD OTT Release: ஆயிரம் கோடி ரூபாயை வேட்டையாடிய கல்கி கி.பி.2898 - எப்போது ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

Marimuthu M HT Tamil
Aug 17, 2024 11:58 AM IST

Kalki 2898 AD OTT Release: ஆயிரம் கோடி ரூபாயை வேட்டையாடிய கல்கி கி.பி.2898 திரைப்படம், எப்போது ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?. அது குறித்த முக்கிய அறிவிப்பைக் காண்போம்.

Kalki 2898 AD OTT Release: ஆயிரம் கோடி ரூபாயை வேட்டையாடிய கல்கி கி.பி.2898 - எப்போது ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?
Kalki 2898 AD OTT Release: ஆயிரம் கோடி ரூபாயை வேட்டையாடிய கல்கி கி.பி.2898 - எப்போது ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

கல்கி 2898 இரண்டு ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியான திரைப்படம், கல்கி கி.பி.2898.

இதுதொடர்பாக நெட்பிளிக்ஸ் இந்தியா இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோவில், கல்கி கி.பி. 2898 படத்தின் வீடியோவைப் பகிர்ந்து ஓடிடி ரிலீஸ் தேதியை உறுதிசெய்தது. அதில், "ஒரு புதிய சகாப்தத்தின் விடியல் உங்களுக்காக காத்திருக்கிறது. கல்கியின் பிரமாண்ட உலகத்திற்கான நுழைவாயில் இதுதான். கல்கி கி.பி.2898 ஆகஸ்டு 22ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ரிலீஸாகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பிரைம் வீடியோ ஓடிடி தளத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், கல்கி கி.பி.2898 திரைப்படத்தின் போஸ்டர்களைப் பகிர்ந்து, பிளாக்பஸ்டர் கல்கி கி.பி.2898 பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கல்கி கி.பி. 2898 படத்தின் பிரமாண்ட வெற்றி:

உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடி மைல்கல்லை எட்டிய சமீபத்திய இந்திய படம், கல்கி கி.பி.2898ஆகும். இந்தப் படம் அறிவியல் புனைகதை பாணியில் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் கடந்த ஜூன் 27, 2024 அன்று பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வரவேற்பினைப் பெற்றது. உலகளவில் Sacnilk.com இணையதள அறிக்கையின்படி, தோராயமாக ரூ.1041.6 கோடி வசூலித்தது. 

மகாநதி, யெவடே சுப்ரமணியம் போன்ற படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கியுள்ள திரைப்படம், கல்கி கி.பி. 2898. இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது.

முன்னதாக ப்ராஜெக்ட் கே என்று பெயரிடப்பட்ட இந்த படம் இந்து காவியமான மகாபாரதம் மற்றும் அறிவியல் புனைகதை ஆகியவற்றின் கலவையாக திரையில் காட்டப்பட்டது. இப்படத்தில் மேலும், திஷா பதானி, சாஸ்வதா சாட்டர்ஜி மற்றும் ஷோபனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

இந்த படத்தில் அழியாத போர்வீரர் அஸ்வத்தமாவாக, 81 வயதான பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்தார். முன்னதாக, அமிதாப் பச்சன் தனது தனிப்பட்ட சமூக வலைதளப்பதிவில் இப்படம் குறித்து வெகுவாகப் பாராட்டினார்.

இதை ஒரு 'பிரமாண்டமான காட்சி' என்று அழைத்த நடிகர் அமிதாப் பச்சன், இந்த படம் 'தொன்மத்தையும் யதார்த்தத்தையும் ஒன்றிணைக்கிறது என்றும்;  'பார்க்கும் பார்வையாளர்களுக்காக பிரமாண்டத்தை ஒன்றிணைக்கும் செயல்முறை குறித்து திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு கற்றல் அனுபவத்தைத் தரும்’ என்றும் பாராட்டினார். 

கல்கி கி.பி.2898 படத்தின் கதை:

கல்கி கி.பி 2898 திரைப்படமானது, உயிர் வடிவம் இல்லாத உலகில் இருக்கும் காம்ப்ளெக்ஸ் பகுதியின் கடைசி நகரம், காசி நகரம். காசியை கொடுங்கோலன் யாஸ்கின் (கமல்ஹாசன்) ஆளுகிறார். அவர் நகரத்தின் மீது வட்டமிடும் தலைகீழ் பிரமிடுக்குள் (இது காம்ப்ளெக்ஸ் எனப்படுகிறது) அமர்ந்திருக்கிறார். இதற்கிடையில், பைரவர் (பிரபாஸ்) போன்ற  வேட்டைக்காரர்கள் பணம் சம்பாதிக்க முயற்சிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் மிகவும் சலுகை பெற்ற வாழ்க்கையை வாழக்கூடிய காம்ப்ளெக்ஸுக்குள் நுழைய முயற்சிக்கின்றனர். காம்ப்ளெக்ஸ் பகுதியில் தனக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்ற மிகப்பெரிய லட்சியம் கொண்டவராக அதில் பைரவர் இருக்கிறார்.

அதனால், காம்ப்ளெக்ஸ் பகுதி, ஒரு வலுவான மனித அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. அதன்பின் நடப்பதே கதை!

இப்படத்தில் அஸ்வத்தமா (அமிதாப்) மற்றும் எஸ்யூ- எம் 80 (தீபிகா படுகோனே) ஆகியோருடன் பைரவர் எவ்வாறு தனது லட்சியத்தை அடைகிறார் என கதை இருக்கிறது. 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.