நெப்போலியனின் மகன் தனுஷுக்கு முதல் முதலாக அக்ஷயா கொடுத்த பரிசு என்ன தெரியுமா? பேட்டியில் என்ன சொன்னார்.. இதோ பாருங்க!
திருமணத்திற்கு பின்னர் அக்ஷயா மற்றும் தனுஷ் ஜோடிகள் இணைந்து, சில பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் அக்ஷயா கொடுத்த பேட்டி ஒன்றில், தனுஷுக்கு முதல் முதலாக கொடுத்த பரிசு என்ன? என்பது குறித்து கூறியுள்ளார்.

பிரபல நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இவருக்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. ஜப்பானில் பிரமாண்டமாக இந்தத்திருமணத்தில் குஷ்பு, சுஹாசினி, ராதிகா சரத்குமார், சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தத்திருமணத்திற்கு தனுஷூக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
ட்ரிப்பும் முக்கியம், கல்யாணமும் முக்கியம்
முன்னதாக, இந்த திருமணம் குறித்து நெப்போலியனும் அவரது மனைவியும் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசினர் அந்த பேட்டியில் அவர்கள் பேசியதாவது, “தனுசுக்கு ஜப்பான் நகரின் டோக்கியோவிற்கு செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. இந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தோம். இதற்கிடையில் அவனுக்கு பெண் கிடைத்து விட்டதாக தகவல் கிடைத்தது. இரண்டும் ஒரே நேரத்தில் வருகிறதே என்று எண்ணி. தனுஷிடம் தற்போதைக்கு இந்த டோக்கியோ நகரின் ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டு, கல்யாண வேலைகளை கவனிக்கலாமா என்று கேட்டோம்.
அதற்கு தனுஷ் நான் இந்த ட்ரிப்புக்காக கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் காத்திருந்திருக்கிறேன். ஆகையால், எனக்கு இந்த ட்ரிப்பும் முக்கியம், கல்யாணமும் முக்கியம். ஆகையால், இந்த கல்யாணத்தை ஜப்பான் நகரின் டோக்கியோவில் நடத்தலாமே என்று கூறினான். அவனின் முடிவுப்படியே நாங்கள் ஜப்பானில் கல்யாணத்தை நடத்த முடிவு செய்தோம்.