புது உறவில் இணையப்போகும் தனுஷ்.. மீட்டிங் எல்லாம் ஓவராம்.. எல்லாம் ஃப்ரஷ்ஷா இருக்கப் போகுது!
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து மீண்டும் இருவரும் தம்பதிகளாக வாழ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் தற்போது தொடர்ந்து படங்களை இயக்குவதிலும், நடிப்பதிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவர் கவனம் தற்போது குடும்பத்தின் பக்கமும் சென்றுள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் சொல்கின்றன.
ரஜினி வீட்டில் மீட்டிங்
கருத்து வேறுபாடு காரணமாக மனைவி ஐஸ்வர்யைவை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்த தனுஷ், தற்போது மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ தயாரானதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், இதுதொடர்பாக இருவரும் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் சந்தித்து பேசினர் எனவும், அந்த சந்திப்பு சுமூகமாக முடிந்ததை அடுத்து இருவரும் ஒன்றாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
விவாகரத்தை ரத்து செய்ய உள்ளனரா?
சில நாட்களாகவே, சமூக வலைதளங்களில் இருவரும் பரஸ்பரமாக செல்லும் நிலையில், ரஜினி நடித்த வேட்டையன் படத்தை குடும்பத்துடன் அனைவரும் ஒரே தியேட்டரில் பார்த்து ரசித்தனர். மேலும், விவாகரத்து வழக்கில் ஐஸ்வர்யாவும், தனுஷும் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வருகின்றனர். இவர்களின் இந்தச் செயல்கள் மீண்டும் குடும்ப வாழ்க்கையில் இணைவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர்.
