Tamil News  /  Entertainment  /  Akshaya Udayakumar Post About Bigg Boss Tamil 7

Akshaya Udayakumar : நிறைய புரிஞ்சுகிட்டேன்.. பிக் பாஸில் மிக்சர் சாப்பிட்ட அக்‌ஷயா புலம்பல் போஸ்ட்!

Aarthi Balaji HT Tamil
Jan 21, 2024 09:50 AM IST

Akshaya Bigg Boss: பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்து அக்‌ஷயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அக்‌ஷயா
அக்‌ஷயா

ட்ரெண்டிங் செய்திகள்

சினிமா குடும்ப பின்னணி இல்லாத அக்‌ஷயா நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால்,சகோதரருடன் சேர்ந்து இன்ஸ்டாவில் ரீல்களை பதிவிட்டு பிரபலமானார்.

மலையாளத்தில் ஹயா, சித்தி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமானவராக வலம் வரும் இவரை இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்திற்கு அதிகமான மக்கள் பின் தொடருகிறார்கள்.

லவ் டுடே படம் மூலம் கிடைத்த வரவேற்பால் இவருக்கு எளிதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அதை எந்த அளவிற்குச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றால் அது பெரிய கேள்விக்குறியே.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதில் இருந்து பாதி வாரங்கள் நாமினேஷன் பட்டியலில் இருந்தார். ஒரு முறை அதை காரணம் காண்பித்துக் கூட அவர் ஜெயிலுக்கு அனுப்பட்டு இருந்தார். பல நேரங்களில் வீட்டில் நடந்த பிரச்னைகளுக்கு அவர் குரல் கொடுக்கவே இல்லை. மேலும் டாஸ்கிலும் அவரின் பங்கு சரியாக இல்லை. இது போன்ற காரணங்களே அக்‌ஷயா பிக் பாஸ் வீட்டில் இருந்து அவரை எலிமினேட் செய்ய வைத்தது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்து அக்‌ஷயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், “ என்னுடைய நல்ல மற்றும் கெட்ட காலத்திலும் என்னுடன் நின்ற உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். பிக் பாஸ் எனக்கு ஒரு சிறந்த தளமாக இருந்தது. அது எனக்கு வாழ்க்கைப் பாடங்களைக் கொடுத்தது. அதை நினைத்து நான் வருத்தப்படவில்லை.

பயணத்தை முழுவதுமாகச் சமாளித்து, சூழ்நிலைகளைச் சமாளிக்க என்னால் முடிந்தவரை முயன்றேன். தவறுகளைச் சரி வரச் செய்தேன், என்னதான் செய்தாலும் என்னுடைய நல்ல குணங்களைக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். . புதிய வாழ்க்கை அனுபவங்களுடன் ஒரு புதிய தொடக்கத்துடன். எனக்கு ஆதரவாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

அவர் ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்த போதே அடுத்தவர்களைத் தாக்கி கேம் விளையாடத் தெரியாது என கூறி இருந்தார். அதையே தான் தற்போது தன்னுடைய பதிவிலும் சொல்லுகிறார். நிச்சயமாக பிக் பாஸ் மூலமாக அக்‌ஷயாவிற்கு மேலும் படங்களின் வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அக்‌ஷயாவின் தாய் பேசுகையில் "கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகள் அனைவருமே வீட்டுக்குள் முடங்கிப்போனார்கள். அப்போது அக்‌ஷயா ஏராளமான ரீல்ஸ்களை எடுத்து பகிர்ந்தார். அது சில இயக்குநர்கள் கண்ணில் பட்டு விட்டது. அதன் மூலம் அவளுக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படி தான் திரைத்துறையிற்குள் வந்தார் “ என்றார்.

பிக் பாஸ் வீட்டில் 50 நாட்களுக்கு மேல் நீடித்த அக்‌ஷயா ஒரு நாளைக்கு ரூ 15,000 சம்பளமாக வாங்கினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.