‘இது ரொம்ப அநியாயமா இருக்கே..’ கணவருக்கு நடந்த கொடுமை - தட்டிக்கேட்ட சுஜா வருணி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘இது ரொம்ப அநியாயமா இருக்கே..’ கணவருக்கு நடந்த கொடுமை - தட்டிக்கேட்ட சுஜா வருணி!

‘இது ரொம்ப அநியாயமா இருக்கே..’ கணவருக்கு நடந்த கொடுமை - தட்டிக்கேட்ட சுஜா வருணி!

Aarthi Balaji HT Tamil
Dec 02, 2024 09:38 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சிவகுமார் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பாக சுஜா வருணி பதிவு வெளியீட்டு உள்ளார்.

‘இது ரொம்ப அநியாயமா இருக்கே..’ கணவருக்கு நடந்த கொடுமை - தட்டிக்கேட்ட சுஜா வருணி!
‘இது ரொம்ப அநியாயமா இருக்கே..’ கணவருக்கு நடந்த கொடுமை - தட்டிக்கேட்ட சுஜா வருணி!

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று எப்போது சொல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த முறையும் அதையே செய்து காட்டி இருக்கிறது.

கடந்த வாரம் நாமினேஷன் லில்ஸ்டில் இருந்தவர்களான ஆன்லைனில் நடத்தப்பட்ட வாக்கில் சாச்சனா தான் குறைவான வாக்குகளை பெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவருக்கு பதிலாக கடந்த வாரம் சிவகுமார் மக்கள் மத்தியில் குறைவான வாக்கு பெற்று என கூறி எலிமினேட் செய்யப்பட்டார்.

சுஜா வருணி அதிருப்தி

இந்நிலையில் சிவகுமார் வெளியேற்றப்பட்டது தொடர்பாக அனைவரும் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சிவகுமாரின் மனைவியும், நடிகையுமான சுஜா வருணியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது அதிருப்தியை பகிர்ந்து உள்ளார்.

அதில், ஆறாவது இடத்தில் இருந்த சிவகுமார் எவிக்ட் செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால் கடைசி இடத்தில் இருந்த சாச்சனா காப்பாற்றப்பட்டு இருக்கிறார். அவரை விஜய் சேதுபதி காப்பாற்றிவிட்டார் ” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

எத்தனை பேர் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்

இதுவரை, பிக் பாஸ் தமிழ் 8 இல் நான்கு பெண் மற்றும் இரண்டு ஆண் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சிவகுமாரையும் சேர்த்து தற்போது மூன்று ஆண் போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.

பிக் பாஸ் தமிழ் 8 இல் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா முதல் போட்டியாளராக எலிமினேட் செய்யப்பட்டார். பின்னர் அடுத்த வாரமே மீண்டும் என்டிரி கொடுத்தார்.

வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவர்களாவது பிக் பாஸ் வீட்டினை சுவாரசியமாக மாற்றுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவர்கள் நிகழ்ச்சியை இன்னும் சொதப்பி வந்தனர். இதனால், பிக் பாஸ் மீதான விருப்பம் மக்கள் மத்தியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது.

இப்படி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகிய 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். 6 ஆவதாக சிவகுமார் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

சுவாரசியமே இல்லாத பிக் பாஸ்

சுவாரசியமே இல்லாத பிக் பாஸ் போட்டியாளர்களை வெளியேற்றும் விதமாக பிக் பாஸ் 8 ஆவது சீசன் வீட்டில் வாரம் வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடக்கும். நாமினேஷன் பட்டியலில் உள்ள மற்ற போட்டியாளர்கள் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் காப்பாற்றப்படுவர். குறைவான வாக்குகளை பெற்றவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.