விஜய் சேதுபதியின் காதல்.. 2ம் திருமணத்திற்கு தயாரான சமந்தா.. கொளுத்திப் போட்ட பயில்வான்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜய் சேதுபதியின் காதல்.. 2ம் திருமணத்திற்கு தயாரான சமந்தா.. கொளுத்திப் போட்ட பயில்வான்

விஜய் சேதுபதியின் காதல்.. 2ம் திருமணத்திற்கு தயாரான சமந்தா.. கொளுத்திப் போட்ட பயில்வான்

Malavica Natarajan HT Tamil
Dec 18, 2024 08:49 PM IST

பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமந்தாவின் இரண்டாம் திருமணம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

விஜய் சேதுபதியின் காதல்.. 2ம் திருமணத்திற்கு தயாரான சமந்தா.. கொளுத்திப் போட்ட பயில்வான்
விஜய் சேதுபதியின் காதல்.. 2ம் திருமணத்திற்கு தயாரான சமந்தா.. கொளுத்திப் போட்ட பயில்வான்

பார்க்காமலே காதல்

இதுகுறித்து அவர் king 24X7 எனும் யூடியூப் சேனலில் தெரிவித்த கருத்துகள் தான் இவை. "நடிகர் விஜய் சேதுபதியின் மனைவி ஜெர்சி. இந்தத் தம்பதிக்கு சூர்யா, ஸ்ரீஜா என 2 பிள்ளைகள் உள்ளனர். சூர்யா கதாநாயகனாக நடித்து வரும் நிலையில், ஸ்ரீஜா பின்னணி பாடகியாக உள்ளார்.

விஜய் சேதுபதி துபாயில் அக்கவுண்டன்ட் வேலை பார்த்து வந்தார். அந்த சமயத்தில் சென்னையில் உள்ள வங்கியில் அக்கவுண்டெண்டாக வேலை பார்த்து வந்தார் ஜெர்சி. இவர்கள் இருவரும் நண்பர் ஒருவர் மூலமாக பழகும் சூழல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலே நட்பாக பழகி பின்னர் காதலர்களாக மாறினார்கள்.

தகராறால் தனிக் குடித்தனம்

ஆன்லைனிலே டேட்டிங் செய்து வந்த விஜய் சேதுபதி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வருகிறார். துணை நடிகராக நடிக்க வந்த விஜய் சேதுபதி, ஜெர்சியை திருமணம் செய்து கொண்டதால் இருவர் வீட்டிலும் தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கை நடத்தினர். அந்த சமயத்தில் விஜய் சேதுபதி சினிமா வாய்ப்புக்காக அழைந்து திரிந்த சமயத்தில் அவருக்கு அவர் மனைவி தான் அனைத்து உதவிகளையும் செய்தார்.

நடிகையால் பிரச்சனை

தென்மேற்கு பருவக் காற்று படத்தில் அறிமுகமான அவர், கதாநாயகன், வில்லன் மட்டுமல்லாது சினிமாவில் தனித்த முத்திரை பெற்றார். இதற்கிடையில், ஒரே நடிகையுடன் தொடர்ந்து நடித்ததால் அவர் குடும்பத்திலும் பிரச்சனை வந்ததாக அவரே கூறி இருக்கிறார்.

2ம் திருமணம் செய்ய நினைக்கும் சமந்தா

நாக சைதன்யாவுடனான பிரிவுக்கு பின் சமந்தா இயக்குநர் ஒருவரை 2வதாக திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. தன் முன்னாள் கணவர் 2ம் திருமணம் செய்து கொள்ளும் போது நாம் ஏன் 2ம் திருமணம் செய்துகொள்ள கூடாது என்ற எண்ணம் சமந்தாவிற்குள் வந்தது. இந்த சமயத்தில் தான் பேமிலி மேன் வெப் தொடர் எடுத்த ராஜி நீர் மோடுவுடன் இணைந்து சிட்டாடல் ஹனி பன்னி தொடரிலும் நடித்தார்.

நன்றிக்கடன் பட்ட இயக்குநரோடு கல்யாணமா?

சமந்தா நடித்த வெப் தொடரில் அவர் அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்டி நடித்ததால் தான் அது வெற்றி பெற்றதாக மாறியது. அதனால் அந்த இயக்குநர் சமந்தாவிற்கு நன்றிக் கடன் பட்டவராக மாறியுள்ளார். இந்நிலையில், தனக்கு கடன்பட்ட இயக்குநர் ராஜ் நீர் மோடுவை சமந்தா திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

குடும்பத்தின் வற்புறுத்தல்

இதற்கு தகுந்தாற் போல சமந்தாவும் பாதுகாப்பான வாழ்க்கைத் துணை, கைக்குழந்தையுடன் இருந்தாலும் பரவாயில்லை என பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் சமந்தா இயக்குநரை 2வதாக திருமணம் செய்வார் என்பது தெரிகிறது. ஏற்கனவே சமந்தா வீட்டில் அவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும் நிலையில் அவர் இந்த முடிவை எடுக்க தயாராகி விட்டார்" என கூறி பரபர்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.