'வேட்டையனுக்கு கள்ளிப் பால் ஊத்தி கொன்னுட்டாங்க.. அத யாரும் கேள்வி கேக்கல' ஆதங்கப்படும் டைரக்டர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'வேட்டையனுக்கு கள்ளிப் பால் ஊத்தி கொன்னுட்டாங்க.. அத யாரும் கேள்வி கேக்கல' ஆதங்கப்படும் டைரக்டர்

'வேட்டையனுக்கு கள்ளிப் பால் ஊத்தி கொன்னுட்டாங்க.. அத யாரும் கேள்வி கேக்கல' ஆதங்கப்படும் டைரக்டர்

Malavica Natarajan HT Tamil
Dec 14, 2024 10:10 PM IST

வேட்டையன் படத்திற்கு எதிர் கருத்து உள்ள சில நபர்கள் கள்ளிப் பால் ஊற்றி கொன்றுவிட்டார்கள் என அப்படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் ஆதங்கமாக பேசியுள்ளார்.

'வேட்டையனுக்கு கள்ளிப் பால் ஊத்தி கொன்னுட்டாங்க.. அத யாரும் கேள்வி கேக்கல' ஆதங்கப்படும் டைரக்டர்
'வேட்டையனுக்கு கள்ளிப் பால் ஊத்தி கொன்னுட்டாங்க.. அத யாரும் கேள்வி கேக்கல' ஆதங்கப்படும் டைரக்டர்

நட்சத்திர பட்டாளம் நடித்த வேட்டையன்

இப்படத்தில் நடிகர் ரஜினி காந்த் மட்டுமின்றி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாளம் மட்டுமின்றி தென்னிந்தியாவையே தனது நடிப்பால் கலக்கிவரும் பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

வேட்டையன் பட இயக்குநர் த.செ. ஞானவேலின் முந்தைய திரைப்படமான ஜெய்பீம் ஏற்படுத்திய தாக்கத்தால் அவருக்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர். படம் வெளியாகும் முன்னே அனிருத் இசையில் வெளியான பாடல்கள் ஹிட் அடித்து படத்திற்கு மேலும் ஹைப் கொடுத்தன.

இதனால், இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையைப் புரியும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவும், ரஜினிகாந்த்தின் ரசிகர்களும் பெரிதாக எதிர்பார்த்தனர்.

அதிகரிக்கப்பட்ட தியேட்டர்கள்

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் வேட்டையன் படத்தை திரையிட அதிக திரையரங்குகளை கோரியதால், அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க லைகா பல முயற்சிகளை எடுத்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் சென்றடையவில்லை. அத்துடன் பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் சறுக்கலை சந்தித்தது.

இயக்குநர் ஆதங்கம்

இந்நிலையில், சினிமா எக்ஸ்பிரஸ் எனும் இயக்குநர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் த.செ.ஞானவேல் வேட்டையன் படத்தை திட்டமிட்டே சிலர் தோல்வியடையச் செய்ததாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "தற்போது திரைப்படங்கள் மீது நிலையான விமர்சனங்கள் வருவது குறைந்துவிட்டது. விமர்சனத்திற்கான நோக்கம் எந்த அடிப்படையில் வெளியாகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

கள்ளிப் பால் கொடுத்து கொன்றனர்

வேட்டையன் படம் வெளிநாடுகளில் திரையிடும் முன்பே வேட்டையன் டிசாஸ்டர் என்ற ஹேஸ்டேக் வெளியாகிவிட்டது. நம் மக்களுக்கு படம் பார்க்கும் முன் விமர்சனத்தை பார்ப்பது ஒரு வழக்கம். அப்படி இருக்கையில் டிசாஸ்டர் என்று சொன்ன படத்தை யார் பார்ப்பார்கள்.

இது கள்ளிப் பால் கொடுத்து கொலை செய்வது போன்றது. நமக்கு பிடிக்காதவர்கள் வந்துவிட்டார்கள் என்றால் கள்ளிப்பால் கொடுத்து கொல்ல வேண்டும் என்ற சிந்தனையில் தான் இதுபோன்ற செயல்கள் நடக்கிறது.

கருத்தில் பிரச்சனை

ஒரு படம் வெளியாகும் முன்பே இப்படி ஒரு ஹேஸ்டேக் வருவது குறித்து இங்கு யாருமே கேள்வி கேட்கவில்லை. ஒருத்தரை அடிக்கனும்ங்குற நோக்கத்தோடவே இங்க நிறைய பேர் இருக்கிறார்கள்.

என்னுடைய கருத்தியலையோ அல்லது என் படத்தில் பணியாற்றுபவர்களின் கருத்துகளையோ விரும்பாத சிலர் சமூக வலைதளங்களில் ஒரு ராணுவம் போல செயல்பட்டு எங்களுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புகின்றனர்.

அந்தப் படத்தில் பல கலைஞர்கள் வேலை பார்த்திருக்கின்றனர். அந்த வாய்ப்புக்கா பல வருடம் காத்திருந்தவர்களும் இருக்கின்றனர். அந்தப் படம் கீழே விழுந்தால் அவர்கள் விழுந்ததாகத் தான் அர்த்தம் என ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.