வேட்டையன் வசூலுக்கு வேட்டு வைத்த படம்..சர்ப்ரைஸாக ஓடிடியில் வெளியீடு - எங்கு பார்க்கலாம்?
வேட்டையன் வசூலுக்கு வேட்டு வைத்த படமாக இருந்த ஜீவா நடித்த பிளாக் படம் சர்ப்ரைஸாக ஓடிடியில் வெளியாகியுள்ளது. தீபாவளி ஸ்பெஷலாக அனைவரும் பார்த்து ரசிக் வேண்டிய படமாகவும் பிளாக் இருந்து வருகிறது.

ஜீவா - பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் திகில் கலந்த திரில்லர் படமாக பிளாக் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துக்கு போட்டியாக ரிலீஸான இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததுடன் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றது. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. நீண்ட நாள்களுக்கு பிறகு ஜீவாவுக்கு ஹிட் கொடுத்த படமாக பிளாக் அமைந்தது.
பிளாக் ஓடிடி ரிலீஸ்
இதையடுத்து பிளாக் படம் சர்ப்ரைஸாக இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. தீபாவளி ஸ்பெஷலாக படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. நேற்றுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் ப்ரைம் அறிவித்தது.
இதையடுத்து யாரும் எதிர்பார்த்திராத விதமாக பிளாக் படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கியுள்ள இந்த படத்துக்கு சாம் சாம். சி.எஸ். இசையமைத்துள்ளார். விவேக் பிரசன்னா, யோகி ஜிபி உள்பட பலரும் படத்தில் நடித்துள்ளார்கள்.
