SelvaRagavan: நீங்க அவ்வளவு காய்ஞ்சுபோயா கிடக்குறீங்க தியானம் பண்றதுக்கு.. ஆன்மிக குரு யார்: வெளுத்துவிட்ட செல்வராகவன்-director selvaraghavan speech on who is a spiritual guru and what all religions teach - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Selvaragavan: நீங்க அவ்வளவு காய்ஞ்சுபோயா கிடக்குறீங்க தியானம் பண்றதுக்கு.. ஆன்மிக குரு யார்: வெளுத்துவிட்ட செல்வராகவன்

SelvaRagavan: நீங்க அவ்வளவு காய்ஞ்சுபோயா கிடக்குறீங்க தியானம் பண்றதுக்கு.. ஆன்மிக குரு யார்: வெளுத்துவிட்ட செல்வராகவன்

Marimuthu M HT Tamil
Sep 10, 2024 07:56 PM IST

SelvaRagavan: நீங்க அவ்வளவு காய்ஞ்சுபோயா கிடக்குறீங்க தியானம் பண்றதுக்கு என்றும் ஆன்மிக குரு யார் என்பது குறித்தும் இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.

SelvaRagavan: நீங்க அவ்வளவு காய்ஞ்சுபோயா கிடக்குறீங்க தியானம் பண்றதுக்கு.. ஆன்மிக குரு யார்: வெளுத்துவிட்ட செல்வராகவன்
SelvaRagavan: நீங்க அவ்வளவு காய்ஞ்சுபோயா கிடக்குறீங்க தியானம் பண்றதுக்கு.. ஆன்மிக குரு யார்: வெளுத்துவிட்ட செல்வராகவன்

தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்கள் இப்போதும் பெரும்பாலான மக்களால் கொண்டாப்படுகின்றன.

இவரது இயக்கத்தில் கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் ஆகிய இரு படங்கள் வெளியாகி ஓரளவு லாபத்தைப் பெற்றுத்தந்தன. இதற்கிடையில் நடிப்பிலும் கவனம்செலுத்திய செல்வராகவன் சாணி காயிதம், பீஸ்ட், பகாசூரன், ஃபர்ஹானா உள்ளிட்டத் திரைப்படங்களில் நடித்தார்.

சமீபத்தில், புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கத்தில், பெயரிடப்படாத ஒரு பான் இந்திய திரைப்படத்தில் செல்வராகவன் மும்முரமாக நடித்து வருகிறார்.

பான் இந்தியா படத்தில் நடிக்கும் செல்வராகவன்:

இப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, புஷ்பா மற்றும் ஜெயிலர் படப்புகழ் சுனில், தெலுங்கு நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி, ராதாரவி, யோகி பாபு, வினோதினி உட்படப் பலர் நடிக்கின்றனர். மேலும் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியத் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, திண்டுக்கல் அருகில் ஏறத்தாழ ஆயிரம் துணைநடிகர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது.

அதேபோல், இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் செல்வா, ட்விட்டரில் அவ்வப்போது தத்துவ ட்வீட்களை பறக்கவிடுவார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பள்ளியில் ஆன்மிக உரை நிகழ்த்தி கைதான மஹா விஷ்ணு என்பவரை மறைமுகமாகத் தாக்கியும் ஆன்மிக குரு என்றால் யார் என்பது குறித்தும், தியானம் எப்படி செய்யவேண்டும் என்பது குறித்தும், அனைத்து மதங்களும் போதிப்பது என்ன என்பது குறித்தும் இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் வீடியோவில் பேசியுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் பேச்சு:

இதுகுறித்து அந்த வீடியோவில் செல்வராகவன் கூறியதாவது, ‘’என்னங்க இது. யாரோ ஒருத்தர் ஏதோ உளறிக்கிட்டு. நான் ஆன்மிக குருன்னு கண்டது எல்லாம்பேசிட்டு இருந்தால், உடனே நீங்களும் பெட்ஷீட் எல்லாம் எடுத்துக்கிட்டு, நூறுபேர் போய் கண்ணை மூடிக்கிடுவீங்களா. உண்மையான குரு என்பவங்க, நீங்கள் தேடிப்போக வேண்டாம். அவரே உங்களைத் தேடி வருவார். உங்கள் மீட்டிங் தானாக நடக்கும். டிவியில் விளம்பரம் கொடுத்துக்கிட்டு, மைக்கெல்லாம் காது பக்கத்தில் வைச்சுக்கிட்டு, நான் உங்களுக்கு தியானம் சொல்லித்தர்றேன்னு சொல்றது எல்லாம் சொல்லமாட்டாங்க. முதன்மையான குரு என்பவர் தன்னை வெளிப்படுத்திக்கவே மாட்டாங்க. என்னங்க.. நீங்க அவ்வளவு காய்ஞ்சுபோயா கிடக்குறீங்க, தியானம் பண்றதுக்கு. நான் உங்களுக்கு ஒன்று சொல்றேன்.

தியானம் தான் உலகத்திலேயே ஈஸியான விஷயம். உலகத்தில் இருக்கிற எல்லாமதங்களும் போதிக்கிறது, நம் கடவுள் நம்முடன் இருக்கிறான் அப்படிங்கிறதுதான். உலகத்திலேயே ஈஸியான விஷயம் என்றால், நம் ஈகோ தன்னால் ஒத்துக்குமா?. அதுக்கு கஷ்டப்படணும். உருளணும்,புரளணும். மந்திரம் சொல்லணும் அப்படின்னு இதெல்லாம் உங்க மனசு சொல்றதுதான்.

இருக்கிறதிலேயே ஈஸி புத்தரோட டெக்னிக் தாங்க. நாசி என்கிற காற்று புகும் மூக்கில் உங்கள் நினைப்பினை வைங்க. மூச்சு இழுக்கறது, மூச்சுவிடுறது பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க. அதெல்லாம் தன்னால் நடக்கும். நடுவில் வேறு ஏதாவது நினைப்பு வந்தால், அதைத்தவிர்க்க எல்லாம் முயற்சி செய்யாதீங்க. அதுபாட்டுக்கு வரும். கொஞ்சநேரம் இருக்கும். அதுவே போகிடும். அப்புறம் மனசை திருப்பி நாசிகளுக்குக் கொண்டு வந்திடுங்க. இதைத்தான் நீங்க பண்ணனும். காலங்கள் போகப்போக, தன்னாலே மற்ற நினைப்புகள் எல்லாம் நிற்க ஆரம்பிச்சுடும். இவ்வளவுதாங்க. புத்தர் வந்து இதுதாங்க சொல்றார். இதுதானாக நடக்கும். இது நீச்சல் குளத்தில் குதிச்ச மாதிரிதான். அருவியில் குதிச்ச மாதிரி தான். நீங்க நீச்சலடிக்க முயற்சி செய்தால், ஒருநாள் நீச்சல் தன்னாலே வந்திடும். ஒன்னு சொல்லிக்குறேன் இதுக்கு மாற்றுக்கருத்துன்னு ஒன்னு சொல்லுங்க நான் ஒத்துக்கிறேன். இதுக்கு மாற்று கருத்துங்கிறதே கிடையாது'' என்றார்.

முன்னதாக நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்ட செல்வராகவன் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதனைத்தொடர்ந்து தன்னுடன் உதவியாளராக பணியாற்றி வந்த கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஓம்கார், லீலாவதி மற்றும் ருத்ராக்ஷ் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.