Gemstone: குரு பகவானின் புஷ்பராக கல்லை யார் அணியலாம்? யார் அணியக்கூடாது? இவ்வளவு நன்மைகளா?-astrological benefits of wearing pushparaga stone blessed by guru bhagwan - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Gemstone: குரு பகவானின் புஷ்பராக கல்லை யார் அணியலாம்? யார் அணியக்கூடாது? இவ்வளவு நன்மைகளா?

Gemstone: குரு பகவானின் புஷ்பராக கல்லை யார் அணியலாம்? யார் அணியக்கூடாது? இவ்வளவு நன்மைகளா?

Kathiravan V HT Tamil
Sep 10, 2024 06:11 PM IST

Gemstone: புஷ்பராகம் அணிவது குரு பகவானின் அருளும் நன்மைகளும் கிடைக்கும். எந்த ரத்தினத்தையும் அணிவதற்கு முன்பு ஜோதிட ஆலோசனையைப் பெற வேண்டும்.

Gemstone: புஷ்பராக கல்லை யார் அணியலாம்? யார் அணியக்கூடாது? இவ்வளவு நன்மைகளா?
Gemstone: புஷ்பராக கல்லை யார் அணியலாம்? யார் அணியக்கூடாது? இவ்வளவு நன்மைகளா?

ஒரு மனிதனின் ஒழுக்கத்தை சிறப்பாக தரக்கூடிய கிரகம் குரு ஆகும். பெருமை, மேன்மை, தனம், செல்வாக்கு, கல்வி, குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தரும் கிரமாக குரு உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் கெட்டால், செல்வம், குழந்தை பாக்கியம் பெறுவதில் சிக்கல்கள் இருக்கும்.

குரு பகவானின் திசை ஒருவருக்கு 16 ஆண்டுகள் வரை நீடிக்கும். இந்த குரு திசை ஆனது ஒருவருக்கு குழந்தை பருவத்தில் வந்தால் நல்ல படிப்பு ஏற்படும். மத்திம வயதில் வந்தால் நல்ல தொழில் அமையும். வயோதிகத்தில் வந்தால் சமுதாய அந்தஸ்து கிடைக்கும்.

புஷ்பராகம் அணிவது குரு பகவானின் அருளும் நன்மைகளும் கிடைக்கும். எந்த ரத்தினத்தையும் அணிவதற்கு முன்பு ஜோதிட ஆலோசனையைப் பெற வேண்டும்.

புஷ்பராகம் அணிவது எப்படி?

ரத்தின ஜோதிடத்தில், 7 அல்லது 12 காரட் மஞ்சள் புஷ்பராகம் அணிவது நல்லது.

இந்த ரத்தினத்தை தங்க மோதிரத்தில் பதித்து அணிய வேண்டும்.

ரத்தினத்தின் எடை சரியாக 6,11 மற்றும் 14 ராட்டிகளாக இருக்கக்கூடாது.

புஷ்பராகம் நடுவிரலில் அதாவது மூன்றாவது விரலில் அணியலாம்.

புஷ்பராகம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள்:

ரத்தின ஜோதிடத்தின்படி, புஷ்பராகம் அணிவது வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றை கொண்டு வரும் என்பது நம்பிக்கை. 

புஷ்பராகம் அணிவது ஒரு நபரின் புத்திசாலித்தனத்தையும் ஞானத்தையும் அதிகரிக்கும்.

புஷ்பராகம் அணிவதால் கோபம் குறைந்து மனதிற்கு அமைதி கிடைக்கும் என்பது ஐதீகம்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner