இன்னும் என் ஆட்டத்தை ஆரம்பிக்கவே இல்லை.. இங்க பழத்துல ஊசி ஏத்த மட்டும் தான் முடியும்- என்ன சொல்கிறார் லோகேஷ்?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் நினைத்த ஆக்ஷன் திரைப்படத்தை இன்னும் எடுக்கவே இல்லை என தனது வருத்தத்தை கூறியுள்ளார்.
நீலம் சோசியல் யூடியூப் சேனலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் கிளாஸ் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று சினிமா பற்றிய சில விஷயங்களை பேசி கலந்தாலோசித்து உள்ளார்.
நினைத்த படத்தை இன்னும் எடுக்க இல்லை
நான் சினிமாவில் எடுக்க வேண்டும் என நினைத்த ஆக்ஷன் படத்தை இப்போதுவரை எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார். தனது திரைப்படத்தில் அதிகளவு வன்முறை கையாளப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.
ஆனால், நான் எடுக்க நினைத்த படங்கள் இவை அல்ல. சினிமாவிற்குள் நுழைந்த உடன் நம்மால் நினைத்த அனைத்தையும் செய்துவிட முடியாது. நாட்கள் போகப்போகத் தான் அவை நடக்கும். என்னுடைய முதல் படம் கைதி எடுத்துவிட்டு, சென்சாருக்கு அனுப்பினோம். அங்கே பல பிரச்சனைகளை சந்தித்தோம்.
ஒரு ஆக்ஷன் படத்தை நாம் நினைத்தபடி அப்படியே எடுக்க முடியாது. அதுமட்டுமின்றி, என் படத்தில் அறிவியல் கோட்பாடுகளை மீறி எந்த சண்டைக் காட்சிகளும் இருக்கக்கூடாது என்பதில் நான் எப்போதும் கவனமாக இருப்பேன்.
பழத்தில் ஊசி குத்துவது போன்று
நான் சினிமாவிற்குள் வந்தபோது, பில் கில் போன்ற ஆக்ஷன் திரைப்படம் எடுக்க வேண்டும் என ஆசை இருந்தது. ஆனால், சினிமாவில் அதுபோல படங்களை எடுக்கவும், வெளியிடவும் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும். இங்குள்ள சினிமாவில் பழத்தில் ஊசியை ஏற்றுவது போல தான் நம்மால் கதையை கொடுக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
லியோ 2 இப்படித் தான் இருக்கும்
நடிகர் விஜய்யுடன் மேலும் படங்கள் இயக்க வேண்டும் என எனக்கு விருப்பம் இருந்தது. ஆனால், அவரின் தனிப்பட்ட முடிவில் நாம் தலையிட முடியாது. வரும் நாட்களில் லியோ 2ம் பாகம் எடுக்கும் சூழ்நிலை உருவானால், அதற்கு லியோ 2 என பெயரிடமாட்டேன். மாறாக அதற்கு பார்த்திபன் என்று தான் பெயரிடுவேன் என்றார்.
கூலி
கூலி திரைப்படம் நடிகர் ரஜினி காந்தின் 171வது திரைப்படம். இதற்கு முன் இத்தனை திரைப்படத்தில் நடித்தவருக்கு படப்பிடிப்பு தளம் குறித்தும், மற்ற நடிகர்களின் நாட்கள் எவ்வளவு முக்கியம் என்பது குறித்தும் தெரியும். அதனால் தான் அவர், எங்களிடம் முன்கூட்டியே அவரின் சிகிச்சை குறித்து கூறினார். நாங்களும் அதற்கு தகுந்தாற்போல படப்பிடிப்பை முடித்தோம்.
ஆனால், இங்கு பிரச்சனையே வேறு மாதிரி கையாளப்பட்டுள்ளது என கூலி படத்துடன் ரஜினி காந்த்தின் உடல்நிலையை தொடர்புபடுத்தி வெளியான கருத்துகள் குறித்து பேசியிருந்தார்.
லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்
2017 ம் ஆண்டு தமிழில் வெளியான மாநகரம் எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், கைதி படத்தின் மூலம் மாபெரும் வெற்றி அடைந்து, உச்ச நட்சத்திரங்களை இயக்கும் முன்னணி இயக்குநரானார்.
பின், மாஸ்டர், லியோ, விக்ரம் என அடுத்தடுத்த படங்களில் தனது முத்திரையை பதித்து, லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸையே உருவாக்கி அடுத்தடுத்த படங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி வருகிறார்.
தற்போது, இவர் நடிகர் ரஜினி காந்த்தை வைத்து இயக்கும் கைதி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த நிலையில், இப்படத்தில் நடிக்க உள்ள நட்சத்திரங்களின் பெயர்களால் ரசிகர்கள் எப்போது படம் வெளியாகும் என ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
டாபிக்ஸ்