Top Tamil movies Netflix: ஜிகர்தண்டா 2, லியோ! நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அதிகம் பார்த்து ரசிக்கப்படும் தமிழ் படங்கள் லிஸ்ட்
Top Tamil movies Netflix: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக பார்வைகளை பெற்ற தமிழ் படம் என்ற பெருமையை விஜய் சேதுபதியின் மகாராஜா பெற்றுள்ளது. ஜிகர்தண்டா 2, தளபதி விஜய்யின் லியோ உள்பட நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்த்து ரசிக்கப்படும் டாப் தமிழ் படங்கள் எவை என்பதை பார்க்கலாம்.
வாரம்தோறும் திரையரங்கு சென்று படம் பார்க்கும் காலம் மாறி தற்போது ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் வெளியாகும் படங்களை லிஸ்ட் போட்டு பார்க்கும் சூழல் மாறியுள்ளது. திரையரங்குகளில் சினிமா படங்கள் வெளியாவது போல் பிரபல ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் உள்பட பல்வேறு ஓடிடி தளங்களில் புதிதான படங்களும், வெப்சீரிஸ்களும் ரிலீஸ் செய்யப்படுகின்றன.
தமிழ் என்று இல்லாமல் பிற மொழி படங்களும் தமிழ் டப்பிங் அல்லது சப்டைட்டிலுடன் இடம்பெறுகிறது. எனவே திரையரங்கை காட்டிலும் ஓடிடியில் படங்களை பார்ப்பது பலரது விருப்பமாகவே மாறியுள்ளது.
அந்த வகையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் இடம்பிடித்திருக்கும் டாப் ரேட்டிங் தமிழ் சினிமாக்கள் எவை என்பதை பார்க்கலாம். சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்வையை பெற்ற இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. தற்போது வரை இந்த படத்தை 18.6 மில்லியன் பார்வையை பெற்று முதல் இடத்தில் உள்ளது.
இந்த படம் தவிர டாப் லிஸ்டில் இருக்கும் தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ
ஜிக்ரதண்டா
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரண்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான படம் ஜிகர்தண்டா 2. கார்த்திக் சுப்பராஜ் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் ஒரிஜினல் படத்தின் முன் கதையாக அமைந்துள்ளது.
ஆக்ஷன் த்ரில்லர் ட்ராமா பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உள்ளது. ஐஎம்டிபி ரேட்டிங் 8.1/10 பெற்றுள்ளது
லியோ
தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகியிருக்கும் லியோ திரைப்படம், ரிலீஸின் போது கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் நெட்பிளிக்ஸில் படத்தை அதிகம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
2 மணி 44 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் ஐஎம்டிபி ரேட்டிங் 7.2/10 பெற்றுள்ளது. படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், ப்ரியா ஆனந்த் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்
மாமன்னன்
மாரிசெல்வராஜ் இயக்கித்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசில், வடிவேலு, க்ரீத்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் மாமன்னன். ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் வடிவேலு காமெடியானாக இல்லாமல் சீரியசான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
2 மணி 35 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் ஐஎம்டிபி ரேட்டி 6.7/10 பெற்றுள்ளது
டான்
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்து அறிமுக இயக்குநர் சிப சக்கரவர்த்தி இயக்கிய டான் திரைப்படம் நெட்பிளிக்ஸ் டாப் லிஸ்டில் உள்ளது. படத்தில் எஸ். ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
கல்லூரி பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி படமான டான், 2 மணி 48 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உள்ளது. ஐஎம்டிபி ரேட்டிங் 6.8/10 பெற்றுள்ளது
லவ் டுடே
ரெமாண்டிக் படமான லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் நடித்து, இயக்கியுள்ளார். படத்தில் இவானா, ரவீனா, யோகி பாபு பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். 2 மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் ஐஎம்டிபி ரேட்டிங்கில் 8/10 பெற்றுள்ளது.
இந்த படங்களுக்கு அடுத்த படியாக அடுத்தடுத்த இடங்களில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்த மண்டேலா, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா நடித்த சூப்பர் டீலக்ஸ், சாந்த குமார் இயக்கத்தில் ஆர்யா நடித்த மகாமுனி ஆகிய படங்கள் இருக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/