ரஜினி சாரால் பெங்களூரு விதிகளில் கிடைத்த பிரபலம்.. ரஜினி சார் ஓகே சொன்ன கதையில் நடித்த அஜித்.. கே.எஸ். ரவிகுமார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரஜினி சாரால் பெங்களூரு விதிகளில் கிடைத்த பிரபலம்.. ரஜினி சார் ஓகே சொன்ன கதையில் நடித்த அஜித்.. கே.எஸ். ரவிகுமார்

ரஜினி சாரால் பெங்களூரு விதிகளில் கிடைத்த பிரபலம்.. ரஜினி சார் ஓகே சொன்ன கதையில் நடித்த அஜித்.. கே.எஸ். ரவிகுமார்

Marimuthu M HT Tamil
Oct 20, 2024 03:25 PM IST

ரஜினி சாரால் பெங்களூரு விதிகளில் கிடைத்த பிரபலம் பற்றியும், ரஜினி சார் ஓகே சொன்ன கதையில் நடித்த அஜித் குறித்தும் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் விரிவாகப் பேட்டி கொடுத்துள்ளார்.

ரஜினி சாரால் பெங்களூரு விதிகளில் கிடைத்த பிரபலம்.. ரஜினி சார் ஓகே சொன்ன கதையில் நடித்த அஜித்.. கே.எஸ். ரவிகுமார்
ரஜினி சாரால் பெங்களூரு விதிகளில் கிடைத்த பிரபலம்.. ரஜினி சார் ஓகே சொன்ன கதையில் நடித்த அஜித்.. கே.எஸ். ரவிகுமார்

டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலுக்கு கே.எஸ். ரவிக்குமார் அளித்த பேட்டியில், ‘’ரஜினி கூட படங்களில் பணியாற்றியது மட்டுமில்லாமல், எந்தக் கதையை விவாதித்தாலும் அந்தக் கதையின் விவாதத்தில் ரஜினி சார் பங்கெடுக்கிறார். அது பற்றி?

பதில்: ஹே ராம் படத்தை கமல் சாரே இயக்கி நடிக்கப்போறதாகச் சொன்னார். அப்போது தெனாலி படத்தை நீங்களே புரொடியூஸ் செய்யலாம் அப்படின்னு கமல் சார் சொன்னார். அப்ப ரெகுலராக ரஜினி சாரை மீட் பண்ணுவேன். இந்த விஷயத்தை ரஜினி சார்கிட்ட சொல்றேன். ஏற்கனவே படம் தயாரிச்சிருக்கீங்களான்னு கேட்கிறார். இல்லை சார்னு சொல்றேன். நீங்களே பண்ணீடுங்கன்னு ரஜினி சார் என்னிடம் சொல்கிறார்.

சரின்னு சந்திரஹாசன் சாரைப் போய் பார்க்கிறேன். மற்றமொழிகள், வெளிநாடு விநியோகம், சேட்டிலைட் ரைட்ஸ் எல்லாம் அவ்வை சண்முகியில் அவங்க பார்த்தாங்க. அன்னிக்கு சேட்டிலைட் எல்லாம் பெரியதொகையாக கிடைக்காது. தமிழ் மட்டும் தயாரிப்பாளர்கள் பார்த்தாங்க.

கமல் சாரை வைச்சு நான் எடுத்த ரிஸ்க்: கே.எஸ்.ரவிகுமார்

அதே கூட்டணி தான் மறுபடியும் வருது. அந்த சம்பளம் கொடுத்திடுங்கன்னு சொன்னார். கமல் சாரும் ரஜினி சாரும் நல்ல நண்பர்கள். அட்வான்ஸும் நாளைக்கு கொடுத்திடுங்கன்னு ரஜினி சார் சொன்னார். உடனே, நம்மளை எதிர்பாக்குறாங்கன்னு நினைச்சு, என் கையில் இருக்கிற தொகையைக் கொண்டுபோய் கமல் சார்கிட்ட அட்வான்ஸாக கொடுத்திட்டேன்.

ஒரு கண்டிசன் ஒரு வருசத்துக்குள் மாதமாதம் இவ்வளவு கொடுக்கணும்னு இருக்கு. நானும் என் வொஃய்ப்பும் போய் மாதமாதம் கையெழுத்துப்போட்டு கொடுத்திட்டு வருகிறோம். நிறையபேர், தவறானமுடிவு எடுத்திட்டீங்கன்னு சொல்லிட்டே பயம் காட்டுறாங்க.

அப்பகூட, என் அப்பா சம்பாதிச்சது என் பசங்களுக்கு இருக்கு. நான் சம்பாதிச்சது தான் போகும்ன்னு சொன்னேன். அப்போது ஹே ராம் படத்தோடு சூட்டிங் ஒரு வருஷமாக நடந்திட்டு இருக்கு. இடையில் என் ஆபிஸுக்கு ரஜினி சார் வர ஆரம்பிச்சிட்டார். நாம சொல்லித்தானே அவர் புரொடியூஸ் பண்றாருன்னு ரஜினி சாருக்கு ஒரு பயம் வந்திடுச்சு.

அப்போது ரெடி பண்ணி வைச்ச கதையை ரஜினி சாரிடம் சொன்னேன். கோமாளியாக இருந்தாலும் புத்திசாலியாக இருக்கான்ல, தெனாலி ராமன் மாதிரி. படத்துக்கு தெனாலின்னு டைட்டில் வைத்தால் எப்படியிருக்கும். ஆனால், நான் சொன்னேன் சொல்லாதீங்க. தெனாலின்னு வைச்சுக்கங்க அப்படின்னு ரஜினி சார் சொல்லிட்டார். கூட கிரேஸி மோகன், ரமேஷ் கண்ணா, நான் மட்டும் தான் இருக்கோம். படத்தோட சில்வர் ஜூப்ளி விழாவில் தான், இதை நான் வெளியில் சொன்னேன். அப்போது தான் கமல் சாருக்கே தெரியும்.

பெங்களூருவில் எனக்கு கிடைத்த பிரபலம்: கே.எஸ். ரவிகுமார் ஓபன் டாக்

அவங்களுக்குள்ள நல்ல நட்பு இருக்கு. என்னை புரொடியூசர் ஆக்கினதே அவங்க தான். அப்போது பேசின கதை தான், மதனா என்ற ஒரு கதை.

ஒரு நாள் பெங்களூருக்கு ரஜினி சார் வரச்சொன்னார். அங்கபோனால் ஹோட்டலில் கீழே வந்திடுங்க அப்படின்னு சொல்றார். ஹோட்டலில் வெயிட் பண்ணிட்டு இருந்தால் பின்னாடி இருந்து ஒருவர் தட்டுறார். வேற யாரோ மாதிரி இருந்தாங்க. பார்த்தால் ரஜினி சார் வேஷம் போட்டிருக்கார். ’’நான் தான் வந்து வண்டியில் ஏறுன்னு சொல்றார்’’. எனக்கே அடையாளம் தெரியல.

ஆட்டோவில் கூட்டிட்டுப் போயிட்டு இருக்கார். அந்த ஆட்டோக்காரன் என்னைக் கண்டுபிடிச்சிட்டான். அடுத்து எப்போ சார், ரஜினி சார் கூட. ஏனென்றால், முத்து, படையப்பா ரிலீஸ் ஆகி ஃபேமஸ் ஆகியிருக்கு. பக்கத்தில் ரஜினி சாரை வைச்சிக்கிட்டே, என்ன சார் படத்தை ரஜினி சார் படத்தை ரிலீஸ் செய்யாமல் இழுத்திட்டே இருக்கார் அப்படிங்கிறான்.

உடனே வண்டியை நிறுத்தச் சொன்னவர், இனிமேல் நீங்களும் மாறுவேடத்தில் தான் வரணும் போலன்னு சொல்றார். மாறுவேடத்தில் இருக்கிற ரஜினி சார் கூட, நான் போய் பெங்களூரில் பிரியாணி சாப்பிடப்போவேன். கடைக்காரன் என்னை அடையாளம் கண்டுபிடிச்சிடுவானுங்க. அவரை கண்டுக்கல. உடனே வெளியில் வந்துட்டு, கையில் வைச்சிருக்கிற ஸ்டிக்கை எல்லாம் தூக்கி எறியுறார். இப்படியெல்லாம் காமெடி நடக்கும்.

அப்போது தான், சந்திரமுகி படத்தோட கன்னட வெர்ஷன் பார்த்திட்டு என்கிட்ட ரஜினி சார் ஒப்பீனியன் கேட்டார். பிறகு, படத்தோட பூஜை அன்னிக்கு கூப்பிட்டிருந்தார். அப்போது அஜித்தை வைத்து நான் ஒரு படம் எடுக்கிறதாக அறிவிப்பு வந்திருக்கு. எனக்குத் தெரியாமல் என்ன கதைன்னு கேட்கிறார். மதனா அப்படி ஒரு கதை பண்ணுனோம்ல சார் அதுதான் சொன்னேன். ஒரு கால் மணிநேரம் பேசல சார்.

இதை கமல் சார்கிட்ட சொல்லிப்பாருங்க. அவர் இதைப் பண்ணமாட்டாரு, பண்ணலைன்னா சொல்லுங்க நான் இதைப் பண்றேன்னு மூணு வருஷத்துக்கு முன்னாடி சொன்னாரு. அது எனக்கு மறந்திடிச்சுன்னு சொன்னேன். அந்தப் படம் தான் வரலாறு. டிரிபிள் ரோல்’ என சொல்லி முடித்தார், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்

நன்றி: டூரிங் டாக்கிஸ்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.