'சார்' படம் வெளியான நாளில் இயக்குநர் போஸ் வெங்கட் தாயார் மரணம்.. அக்கா அண்ணனை தொடர்ந்து இப்போது அம்மா.. தொடரும் சோகம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'சார்' படம் வெளியான நாளில் இயக்குநர் போஸ் வெங்கட் தாயார் மரணம்.. அக்கா அண்ணனை தொடர்ந்து இப்போது அம்மா.. தொடரும் சோகம்!

'சார்' படம் வெளியான நாளில் இயக்குநர் போஸ் வெங்கட் தாயார் மரணம்.. அக்கா அண்ணனை தொடர்ந்து இப்போது அம்மா.. தொடரும் சோகம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 19, 2024 07:44 AM IST

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் சார் திரைப்படம் நேற்று வெளியானது. கல்வியின் அவசியத்தையும் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதையும் இப்படம் மக்கள் மத்தியில் காத்திரமாக பேசி உள்ளது. பல சிக்கல்களை கடந்து வெளியாகி உள்ளது

'சார்' படம் வெளியான நாளில் இயக்குநர் போஸ் வெங்கட் தாயார் மரணம்.. அக்கா அண்ணனை தொடர்ந்து இப்போது அம்மா.. தொடரும் சோகம்!
'சார்' படம் வெளியான நாளில் இயக்குநர் போஸ் வெங்கட் தாயார் மரணம்.. அக்கா அண்ணனை தொடர்ந்து இப்போது அம்மா.. தொடரும் சோகம்!

போஸ் வெங்கட் வீட்டில் துயரம்

'சார்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இந்த நிலையில் போஸ் வெங்கட் வீட்டில் ஒரு துயரம் நிகழ்ந்துள்ளது போஸ் வெங்கட்டின் தாயார் ராஜாமணி நேற்று மாலை 5 மணி அளவில் இயற்கை எய்தினார். இவருக்கு வயது 83 இவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை சொந்த ஊரான அறந்தாங்கியில் நடைபெற உள்ளது.

முதல்வர் இரங்கல்

போஸ் வெங்கட்டின் தாயார் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக பேச்சாளரும், சமூக பொறுப்புணர்வு மிக்க இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் அவர்களின் தாயார் திருமதி ராஜாமணி அம்மாள் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார் என்று அறிந்து வேதனையடைந்தேன். அரவணைத்து ஆளாக்கிய அன்னையை இழந்து நிற்கும் போஸ் வெங்கட் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

ஒரே நாளில் அக்கா, அண்ணனை இழந்த நடிகர் போஸ் வெங்கட்!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி நாடகம் மூலம் மக்கள் மத்தியில் போஸ் வெங்கட் பிரபலமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் கடந்த 2020 ஆம் ஆண்டு 'கன்னிமாடம்' என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். தற்போது சின்னத்திரை நடிகர் சங்க தலைவராகவும் போஸ் வெங்கட் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி சென்னையில் காலமானார். இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் துக்கத்தில் இருந்தனர். இந்த இறுதி சடங்கில் பங்கேற்ற போஸ் வெங்கட்டின் சகோதரரான ரங்கநாதன் தன்னுடைய சகோதரியை பார்த்து கதறி அழுதார். அப்போது திடீரென அவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு சகோதரியின் உடல் மீதே விழுந்து அவரும் மரணம் அடைந்தார். அவர்களது இறுதி ஊர்வலம் அறந்தாங்கியில் நடைபெற்றது. இந்த சம்பவம் திரையுலகத்தினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அடுத்தடுத்து குடும்பத்தில் இரண்டு இறப்பு நிகழ்ந்ததால் போஸ் வெங்கட்டின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர். தனது அக்காவையும், அண்ணனையும் இழந்து தவிக்கும் போஸ் வெங்கட்டுக்கு சமூகவலைத்தளம் மூலமாக பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் போஸ் வெங்கள் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் இயக்கிய சார் திரைப்படம் நேற்று காலை வெளியான நிலையில் மாலை அவரது தாய் மரணமடைந்துள்ளதால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். திரை உலகினர் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்கள் இரங்களை தெரிவித்துள்ளனர்

சினிமா தொடர்பான பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள தொடந்து இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.