Demonte Colony 2 Box Office: ரிலீஸ் ஆன 3 நாட்களில் சூறையாட்டம் ஆடிய டிமான்ட்டி காலனி 2:பாக்ஸ் ஆபிஸில் வசூல் தெரியுமா?-demonte colony 2 collections in three days of release in kollywood news - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Demonte Colony 2 Box Office: ரிலீஸ் ஆன 3 நாட்களில் சூறையாட்டம் ஆடிய டிமான்ட்டி காலனி 2:பாக்ஸ் ஆபிஸில் வசூல் தெரியுமா?

Demonte Colony 2 Box Office: ரிலீஸ் ஆன 3 நாட்களில் சூறையாட்டம் ஆடிய டிமான்ட்டி காலனி 2:பாக்ஸ் ஆபிஸில் வசூல் தெரியுமா?

Marimuthu M HT Tamil
Aug 18, 2024 11:57 AM IST

Demonte Colony 2 Box Office: ரிலீஸ் ஆன 3 நாட்களில் சூறையாட்டம் ஆடிய டிமான்ட்டி காலனி 2 மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் தெரியுமா? என்பது குறித்துப் பார்ப்போம்.

Demonte Colony 2 Box Office: ரிலீஸ் ஆன 3 நாட்களில் சூறையாட்டம் ஆடிய டிமான்ட்டி காலனி 2:பாக்ஸ் ஆபிஸில் வசூல் தெரியுமா?
Demonte Colony 2 Box Office: ரிலீஸ் ஆன 3 நாட்களில் சூறையாட்டம் ஆடிய டிமான்ட்டி காலனி 2:பாக்ஸ் ஆபிஸில் வசூல் தெரியுமா?

டிமான்ட்டி காலனி 2 படக்குழுவினர் யார்?:

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகியிருக்கும் புதிய திரைப்படம் 'டிமான்ட்டி காலனி 2'. இதில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கிறார்கள். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. குமரேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டி மேற்கொண்டிருக்கிறார்.

ஹாரர் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஒயிட் லைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகியப் பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் அஜய் ஞானமுத்து மற்றும் விஜய் சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

2015ஆம் ஆண்டில் 'டிமான்ட்டி காலனி'யின் முதல் பாகம் வெளியானது. வித்தியாசமான ஹாரர் திரில்லர் படமாக அமைந்ததால் ரசிகர்களின் பேராதரவு கிடைத்து வெற்றி பெற்றது. பெரிய நடிகர்கள் நடிக்காமலேயே ரூ.17 கோடி வரை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வேட்டையாடியது.

இந்நிலையில் இப்படத்தில் இரண்டாம் பாகமான டிமான்ட்டி காலனி பாகம் 2ன் படப்பிடிப்பு, நடத்த திட்டமிட்டு, 61 நாட்களில் ஓசூர், சென்னை மற்றும் ஆந்திரா மாநில எல்லை ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகியிருக்கிறது.

டிமான்ட்டி காலனி 2 படத்தின் வசூல் நிலவரம்:

இந்நிலையில் டிமான்ட்டி காலனி 2 படமானது இந்தியாவில் மூன்று நாட்களில் ரூ.10.2 கோடி வசூல் செய்து சாதனைப் புரிந்துள்ளது. குறிப்பாக, ரிலீஸான முதல் நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் ரூ.3.55 கோடியும், ஆகஸ்ட் 16ஆம் தேதி ரூ.2.35 கோடியும், ஆகஸ்ட் 17ஆம் தேதி ரூ.4.3 கோடியும் வசூலித்துள்ளது. உலகளவில் ரூ.15.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இதனால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஹிட்டடித்த டிமான்ட்டி காலனி படத்தின் கதை என்ன?:

நண்பர்கள் நான்கு பேர் வேலைவெட்டி இல்லாமல் சென்னை, பட்டினப்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில் அறை எடுத்து தங்கி இருக்கின்றனர். நான்கு பேரில் பயந்த நண்பர் ஒருத்தரை பயமுறுத்துவதற்காக, மற்ற மூன்று பேரும் டிமான்டி காலனியில் உள்ள பேய் பங்களாவுக்கு அந்த நண்பரை அழைத்துச் செல்கின்றனர்.

அந்த பங்களாவில் பிரிட்டிஷ் காலத்தில் வாழ்ந்து மரணம் அடைந்த நபர்களின் பேய்களுடன், இவர்கள் நான்கு பேருக்கும் ஏற்படும் அனுபவமும், அங்கு கிடைக்கும் ஒரு விலை மதிப்பில்லாத வைர ஆபரணத்தால் இவர்கள் நான்கு பேருக்கும் அறை திரும்பிய பின்பும் நடக்கும் விஷயங்களும் விபரீதங்களுமே 'டிமான்ட்டி காலனி'.

ஆண்டாண்டு காலமாய் தன் பங்களாவுக்குள் அமைதியாய் வாழ்ந்து வரும் டிமான்ட்டி பேயை, அந்த ஆபரணத்தை தங்களது ரூமுக்கு எடுத்து வந்ததின் மூலம் கோபப்படுத்தி விடுகிறார்கள். இவர்கள் நான்கு பேருக்கும் நிகழும் சம்பவங்களை உட்சபட்ச காட்சியாக சொல்லி இருப்பார், இயக்குநர் அஜய் ஞானமுத்து.

அதிலும் அந்த ஆபரணத்தைக் கொண்டு வருபவர்கள் கொல்லப்படுவார்கள் என நம்பப்படுகிறது. இதில் அந்த ரூமில் இருக்கும் ராகவன் மற்றும் விமல் ஆகியோர் அடுத்தடுத்து இறக்கின்றனர். மேலும் அடுத்தடுத்து அனைவரும் இறந்து பேய் ஆவதாகப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.