GOAT Box office: ‘விக்ரம்’ -ன் மொத்த வசூலை இன்னும் சில நாட்களில்.. மிரட்டும் தளபதி.. அரளும் கோலிவுட்! -கோட் வசூல் இங்கே
GOAT Box office: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் மொத்த வசூலான 414. 43 கோடி சாதனையை முறியடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - கோட் பாக்ஸ் ஆபீஸ்!

GOAT Box office: ‘விக்ரம்’ -ன் மொத்த வசூலை இன்னும் சில நாட்களில்.. மிரட்டும் தளபதி.. அரளும் கோலிவுட்! -கோட் வசூல் இங்கே
‘கோட்’ படத்தின் பாக்ஸ் ஆபீஸ் விபரத்தை பார்க்கலாம்.
விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி திரையரங்கில் வெளியான ‘கோட்’ திரைப்படம் உலகளவில் 400 வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விக்ரம் சாதனையை முறியடிக்கும் கோட்
பாக்ஸ் ஆபீஸ் விபரங்களை வெளியிடும் sancik தளம் இந்த தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. கோட் திரைப்படம் 400 கோடி வசூலை தொட்டிருக்கும் நிலையில், இன்னும் சில நாட்களில் முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் மொத்த வசூலான 414. 43 கோடி சாதனையை முறியடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்கி திரைப்படத்திற்கு பிறகு பெரிய ஒப்பனிங்கை பெற்ற இந்தப்படம் இந்தியாவில் மட்டும் வசூல் 200 கோடியை தாண்டி இருக்கிறது.