Nikhila Vimal: வாழை ஓடிடி ரிலீஸ் முன்னர் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய நிகிலா விமல் படங்கள் - இதோ லிஸ்ட்
Nikhila Vimal OTT Movies: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கும் வாழை ஓடிடி ரிலீஸ் முன்பு அந்த படத்தின் கதையின் நாயகியாக நடித்த நிகிலா விமல் நடிப்பில் கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படங்கள் எவையெல்லாம், எந்தெந்த ஓடிடி தளங்களில் இடம்பிடித்துள்ளன என்பதை பார்க்கலாம்

மலையாள நடிகையான நிகிலா விமல், தமிழில் சசிக்குமார் நடித்த வெற்றிவேல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ், மலையாள மொழி படங்களில் நடித்து வரும் நிகிலா விமல், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படத்தில் கதையின் நாயகியாக தோன்ற சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
வாழை ஓடிடி ரிலீஸ்
பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் புதுமுகங்கள் வைத்து உருவாகியிருந்த வாழை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததோடு, விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளனர்.
திரையரங்குகளில் தற்போது வரை ஓடிக்கொண்டிருக்கும் வாழை திரைப்படம், வரும் 27ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. வாழை படத்தை பார்த்த பின்னர் நிகலா விமலுக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது.