500 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் வேட்டையாடிய தேவரா - 2 தேதிகளில் ஓடிடி ரிலீஸ் செய்யத் திட்டமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  500 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் வேட்டையாடிய தேவரா - 2 தேதிகளில் ஓடிடி ரிலீஸ் செய்யத் திட்டமா?

500 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் வேட்டையாடிய தேவரா - 2 தேதிகளில் ஓடிடி ரிலீஸ் செய்யத் திட்டமா?

Marimuthu M HT Tamil
Oct 25, 2024 09:54 AM IST

500 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் வேட்டையாடிய தேவரா மற்றும் 2 தேதிகளில் ஓடிடி ரிலீஸ் செய்யத் திட்டமா? என்பது குறித்துப் பார்ப்போம்.

యాక్షన్ ఓటీటీ
యాక్షన్ ఓటీటీ

அதிரடி ஆக்சன் திரைப்படம் என்று கூறப்படும் ’தேவரா’ படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே படத்தின் டிஜிட்டல் உரிமைகளை சுமார் ரூ.155 கோடிக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இரண்டு ஓடிடி ரிலீஸ் தேதிகள்:

தேவரா திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி 40 நாட்களுக்குப் பிறகு, இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நவம்பர் 8-ம் தேதி முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவரா படத்தின் இந்தி பதிப்பு மட்டும் வரும் நவம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவரா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கின் முன்னணி இயக்குநரான கொரட்டலா சிவா இயக்கியுள்ள இந்த தேவரா படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் முதல் மகள் ஜான்வி கபூர் கதாநாயகி ஆக நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் டோலிவுட்டில் அறிமுகமானார். ஸ்ரீகாந்த் மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வில்லனாக நடித்திருக்கின்றனர்.

ரூ.500 கோடியைத் தாண்டிய வசூல்:

சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான தேவரா பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை ரூ.509 கோடிக்கு மேல் வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் சேர்த்துள்ளது. முதல் நாளிலேயே இந்தியா முழுவதும் 82 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. பிரபாஸின் ’கல்கி’ படத்திற்குப் பிறகு இந்த வருடம் தெலுங்கில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை தேவரா படைத்துள்ளது.

இதுதான் தேவரா படத்தின் கதை:

தேவரா ( ஜூனியர் என்.டி.ஆர்) செங்கடலில் உள்ள நான்கு கிராமங்களின் தலைவர். அவர் தனது நண்பர் ராயப்பா (தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்) மற்றும் மற்றொரு கிராம பெரியவர் பைரா (சைஃப் அலி கான்) ஆகியோருடன் சேர்ந்து முருகாவிடம் (முரளி சர்மா) வேலை செய்கிறார்.

சட்டவிரோத ஆயுதங்களால் தனது பகுதியைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிடுவதால் தேவரா, முருகாவுக்கு வேலை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்கிறார்.

முருகாவிடம் வேலைக்குச்செல்பவர்களை, தேவரா தண்டிக்கிறார். செங்கடல் பகுதி மக்கள் கடவுளுக்கு பயந்து கடலுக்குள் நுழைய பயப்படுகிறார்கள். சட்டவிரோத ஆயுத வர்த்தகத்தை சுமுகமாக நடத்துவதற்கான தடையை அகற்ற, பைரா திட்டமிட்டுள்ளார். தற்செயலாக தேவரா அனைவரின் பார்வையிலும் இருந்து மறைந்துவிடுகிறார். கிட்டத்தட்ட காணாமல் போய்விடுகிறார்.

தேவராவின் மகன் வரா (ஜூனியர் என்.டி.ஆர்) ஒரு கோழையாக வளர்கிறான். கண்ணெதிரே அநீதியை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார். தன் நண்பன் பைரா தன்னைக் கொல்ல விரும்புகிறான் என்று தெரிந்ததும் வரா என்ன செய்தான்?

தேவரா காணாமல் போனதற்கான காரணம் என்ன? அவர் அனைவர் முன்னிலையிலும் வரபாயராக நடிக்க என்ன காரணம்?? வரா தனது தந்தையின் லட்சியத்தை எவ்வாறு நிறைவேற்றினானா? அவரை காதலிக்கிற தங்கத்தின் கதை என்ன என்னும் சஸ்பென்ஸுடன் தேவரா முதல் பாகம் முடிவடைகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.