கார்த்திக்காக போட்டி போட்டு நடக்கும் உபசரிப்பு.. சாமுண்டீஸ்வரி புடவையில் பற்றிய தீ - கார்த்திகை தீபம் அப்டேட்
கார்த்திக்காக போட்டி போட்டு நடக்கும் உபசரிப்பு.. சாமுண்டீஸ்வரி புடவையில் பற்றிய தீ - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் கார்த்திக் ராஜராஜனையும் பரமேஸ்வரி பாட்டியையும் சந்திக்க வைக்க செய்திருந்த ஏற்பாடு தோல்வியில் முடிந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ராஜராஜன் தனது மனதுக்குள் இருக்கும் மனக்குமுறலை கார்த்திக்கிடம் வெளிப்படுத்துகிறார். இரவானதும் கார்த்திக் தூங்க சென்றுவிட, ரேவதி அவனுக்கு சாப்பாடு கொண்டு வந்து சாப்பிட சொல்கிறாள்.
நீங்களும் எங்க வீட்ல ஒருத்தர் தான் நீங்க சாப்பிடாம இருந்தா எப்படி இருக்கும் சாப்பிடுங்க என்று சொல்ல, கார்த்தி உங்களுக்கு தேவைன்னா உங்க வீட்ல ஒருத்தன் இல்லன்னா, யாரோவாவா என்று கேள்வி கேட்க இனிமே அப்படி சொல்ல மாட்டேன். சாப்பிடுங்க, நீங்களும் எங்க குடும்பத்துல ஒருத்தர் தான் என பதில் சொல்கிறாள்.
தேடி வந்த ஆம்லெட்
துர்காவும் அவளது பங்குக்கு ஆம்லெட் ஒன்றை போட்டு வந்து கொடுத்து சாப்பிட சொல்கிறாள். கார்த்திக் இவங்களுக்கெல்லாம் நான் யார் என்று உண்மை தெரிஞ்சா என்ன நடக்குமோ என யோசிக்கிறான்.
அடுத்த நாள் கார்த்திக் சாமுண்டீஸ்வரியை பார்த்து உங்களுக்கு உங்க கணவர் ராஜராஜன் உங்களை விட்டுட்டு அவங்க அப்பா அம்மா கூட போயிட்டு வாரோனு பயம் வந்துடுச்சு என்று சொல்ல, சாமுண்டீஸ்வரியின் மகள்கள் அப்பா ஒரு காலமும் அம்மாவை விட்டுட்டு போக மாட்டாரு என பதில் கொடுக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து ரேவதி ஸ்வாதி மற்றும் சந்திரகலா என மூவரும் பூஜை அறையில் பூஜை செய்வதற்காக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்க சாமுண்டீஸ்வரி பூஜை செய்ய வருகிறாள். அவள் பூஜை அறைக்குள் வந்ததும் மற்றவர்கள் வெளியே வந்து விடுகின்றனர்.
சாமுண்டீஸ்வரி புடவையில் தீ
சாமுண்டீஸ்வரி பூஜை செய்ய தொடங்கிய நேரத்தில் சந்திரகலா யாருக்கும் தெரியாமல் உள்ளே வந்து சாமுண்டீஸ்வரி புடவையை தீப்பற்ற வைத்து விட்டு, நைசாக வெளியே வந்து வேடிக்கை பார்க்க தொடங்குகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
டாபிக்ஸ்