தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Dayanidhi Azhagiri Admitted In Hospital After Blockage In Brain Blood Vessel

Dayanidhi Azhagiri: மூளையின் ரத்தக் குழாயில் அடைப்பு! கோமா நிலையில் மங்கத்தா தயாரிப்பாளர் தயாநிதி மருத்துவமனையில் அனுமதி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 15, 2024 01:01 PM IST

கடந்த இரண்டு மாதங்களாக தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி கோமாவில் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தயாரிப்பாளார் தயாநிதி அழகிரி
தயாரிப்பாளார் தயாநிதி அழகிரி

ட்ரெண்டிங் செய்திகள்

மருத்துவமனையில் அனுமதி

இதையடுத்து தயாநிதி அழகிரி மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தயாநிதியின் உடல் நலம் குறித்து அவரது குடும்பத்தினர் சார்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

கோமா பாதிப்பில் தயாநிதி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்த தனது வீட்டில் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி திடீரென மயங்கி விழுந்துள்ளாராம். பின்னர் உடனடியாக அவர் சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவர் கோமா பாதிப்பில் கடந்த இரு மாதங்கள் வரை இருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மேல் சிகிச்சைக்காக வேலூருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அவரது உடல் நலம் குறித்து குடும்பத்தார் அதிகார்ப்பூர்வ தகவலை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுகிறது

ஹிட் படங்களை தயாரித்த தயாநிதி அழகிரி

தமிழில் முதல் நய்யாண்டி திரைப்படமான தமிழ்ப்படம் என்ற சினிமாவை தயாரித்தவர் தயாநிதி அழகிரி. இதற்கு அடுத்தபடியாக விமல் நடித்த தூங்காநகரம் படத்தை தயாரித்தார்.

அஜித்தின் 50வது படமான மங்காத்தா, சித்தார்த் நடித்த உதயம் என்எச்4, அருள்நிதி நடித்த தகராறு, ஜெய் நடித்த வடகறி ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

அதேபோல் வாரணம் ஆயிரம், பையா, நான் மகான் அல்ல, ரத்த சரித்திரம், வானம், அழகர்சாமியன் குதிரை படங்களின் விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.

கடைசி நேரத்தில் கைகொடுத்த அண்ணன்

தனக்கு மிகவும் விருப்பமான நடிகரான மங்காத்தா படத்தை மிக பெரும் பட்ஜெட்டில் தயாரித்தார் தயாநிதி அழகிரி. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது தயாநிதி அழகிரியின் அண்ணனும், அவரது சித்தப்பாவும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் கடைசி நேரத்தில் கைகொடுத்தார். படத்துக்கு ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்ய உதவினார்.

இதனால் படம் திட்டமிட்ட தேதியில் வெளியானதோடு சூப்பர் ஹிட்டாகி வசூலையும் வாரி குவித்தது. 2014ஆம் ஆண்டில் வெளியான வடகறி படத்துக்கு பிறகு திரைப்படங்கள் தயாரிப்பதை நிறுத்தினர் தயாநிதி. தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் குடும்பத்தினரும், நெருக்கமானவர்களும் உள்ளனர்.

ஆறுதல் கூறிய ஸ்டாலின்

சென்னையில் செட்டிலாகியிருந்த தயாநிதியின் உடலநலம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே சரியில்லாதது பற்றி கேள்விப்பட்ட அவரது சித்தப்பா மு.க. ஸ்டாலின், நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். அப்போது மு.க. அழகிரியும் உடன் இருந்துள்ளார். 

கடந்த 2014ஆம் ஆண்டு திமுக தலைமை இடையே ஏற்பட்ட மோதலில் தயாநிதி அழகிரியன் தந்தை மு.க. அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதன் பின்னர் மு.க. அழகரி, மு.க. ஸ்டாலின் இடையே மனக்கசப்பு இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், துரை தயாநிதி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இரு குடும்பத்துக்கும் உறவு பாலமாக இருந்து வந்துள்ளனர்.

இதன் காரணமாகவே மு.க. ஸ்டாலின் உள்பட கருணாநிதியின் மொத்த குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனையில் தயாநிதி அழகிரியை பார்த்துடன், மு.க. அழகரிக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்