MK Alagiri:திமுக அரசு செயல்பாடு? நீதிமன்றத்தில் இருந்து வந்த மு.க. அழகிரி பதில்
வட்டாட்சியரை தாக்கியது தொடர்பான வழக்கில் ஆஜராக மாவட்ட நீதிமன்றத்துக்கு வந்த மு.க. அழகிரியிடம், திமுக அரசின் செயல்பாடுகள் பற்றி கேட்டபோது நீதிமன்றத்துக்குள் இதுகுறித்து பேசக்கூடாது என்று கூறிவிட்டு சென்றார்.
கடந்த 2011 தேர்தலின்போது மேலூர் வட்டாட்சியரை தாக்கியது தொடர்பான வழக்கில் முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் மு.க அழகிரி உள்பட 21 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 21ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மு.க. அழகரி உள்பட 20 பேர் நேரில் ஆஜரிகனர்.
இதையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில் மு.க. அழகரி, முன்னாள் துணை மேயர் உள்பட திமுக நிர்வாகிகள் நேரில் ஆஜராகினர்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, வட்டாட்சியரை தாக்கியது தொடர்பான வழக்கை வரும் பிப்ரவரி 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
பின்னர் வெளியில் வந்த மு.க.அழகிரியிடம் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நீதிமன்றத்துக்குள் இது குறித்து பேசக்கூடாது என்று கூறிவிட்டு புறப்பட்டார்.
முன்னதாக, கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலில் வைத்து, மு.க. அழகிரி பணம் பட்டுவாடா செய்ததாக வந்த புகாரையடுத்து மேலூர் தேர்தல் அலுவலரும், தாசில்தாருமான காளிமுத்து, தேர்தல் அலுவலர்கள், விடியோ கேமராமேனுடன் அங்கு சென்று விடியோ எடுத்தார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன், திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்பட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் திருஞானம் உயிரிழந்ததையடுத்து வழக்கு தொடர்புடையு 20 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜராகினர்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்