வெறி கொண்டு தாக்கிய நெட்டிசன்ஸ்.. வெத்து வேட்டா வேட்டையன்.. ராட்டினத்தில் ரஜினிமுக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வெறி கொண்டு தாக்கிய நெட்டிசன்ஸ்.. வெத்து வேட்டா வேட்டையன்.. ராட்டினத்தில் ரஜினிமுக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

வெறி கொண்டு தாக்கிய நெட்டிசன்ஸ்.. வெத்து வேட்டா வேட்டையன்.. ராட்டினத்தில் ரஜினிமுக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

Kalyani Pandiyan S HT Tamil
Oct 12, 2024 06:43 PM IST

ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்திற்கு நெட்டிசன்ஸ் கலவையான விமர்சனங்களை தந்து கொண்டிருக்கும் நிலையில், படக்குழு தரப்பில் இருந்து முக்கியமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வெறி கொண்டு தாக்கிய நெட்டிசன்ஸ்.. வெத்து வேட்டா வேட்டையன்.. ராட்டினத்தில் ரஜினி

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
வெறி கொண்டு தாக்கிய நெட்டிசன்ஸ்.. வெத்து வேட்டா வேட்டையன்.. ராட்டினத்தில் ரஜினி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் அதிக திரையரங்குகளை கோரியதால், அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகின்றன என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறார்.

செய்தி தொடர்பாளர் பேட்டி

இது குறித்து லைகா புரொடக்ஷன்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "வேட்டையன் மீதான அன்பையும், ஆதரவையும் கண்டு நாங்கள் உண்மையிலேயே நெகிழ்ந்து போய் உள்ளோம். சூப்பர் ஸ்டாரின் அனைவரையும் ஈர்க்கும் தன்மை, த.செ. ஞானவேலின் இயக்கம் மற்றும் அனிருத்தின் இசை ஆகியவை ஒன்றிணைந்து மற்ற பிராந்தியங்கள் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ஆழமாக பரவி, ஒரு நல்ல சினிமா அனுபவத்தை உருவாக்கியுள்ளது.

வேட்டையன்
வேட்டையன்

அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த விரிவாக்கம் 'ரஜினிகாந்த்' அவர்களின் குறிப்பிடத்தக்க நடிப்பு முதல் த. செ. ஞானவேலின் தொலைநோக்கு பார்வையிலான இயக்கம் வரை மொத்த குழுவின் அர்ப்பணிப்புக்கும் ஒரு சான்றாகும் " என்று பேசி இருக்கிறார்.

கதையின் கரு என்ன?

கன்னியாகுமரி எஸ்.பி அதிகாரியாக இருக்கும் அதியன் ( ரஜினி) என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக ரவுடிகளை அடுத்தடுத்து சுட்டுத் தள்ளுகிறார். இதற்கிடையே அரசு பள்ளியில் நேர்மையான ஆசிரியையாக இருக்கும் சரண்யா ( துஷாரா) நீட் தேர்வுக்கு எதிராக சில வேலைகளை பார்க்க, அதில் கோபமான தனியார் நீட் கோச்சிங் நிறுவனர் நட்ராஜ் ( ராணா) கூலிப்படை ஏவி அவரை கொடூரமாக கொலை செய்கிறார்.

 

 

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

அந்த வழக்கு விசாரணை தெரிந்தே தவறான முறையில் நடந்து இருக்க, அது தெரியாமல் கடைசி நேரத்தில் வந்த அதியன், அதில் சம்பந்தப்படாத ஒருவரை என்கவுண்டர் செய்து விடுகிறார். அந்த வழக்கு மனித உரிமை அதிகாரியும், நீதிபதியுமான சத்ய தேவ் ( அமிதாப்) விசாரணை குழுவிடம் செல்கிறது.

அந்த அப்பாவிக்கு நீதி கிடைக்கும் விவகாரத்தில் ஜெயித்தது காக்கிச் சட்டையா? கருப்புச் சட்டையா?.. சரண்யா கொலையின் பின்னணியில் நடந்த கார்பரேட்டின் சதி வேலை என்ன உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே வேட்டையன் படத்தின் கதை!

தொடரப்பட்ட வழக்கு

முன்னதாக, வேட்டையன் படத்தில் என்கவுண்டர் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும். அல்லது மியூட் செய்யும் வரை அப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கூறி மதுரையைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க முடியாது எனக் கூறியுள்ளது. அத்துடன், இத்திரைப்படத்தில் வரும் வசனங்கள் தொடர்பா, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இத்த வழக்கின் விசாரணையையும் ஒத்தி வைத்துள்ளது.

ஏற்கனவே, ரஜினியின் உடல் நலக் குறைவால் வருத்தத்தில் இருக்கும் அவரது ரசிகர்கள் இந்த வழக்கால், படம் வெளிவருவதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என புலம்பி வருகின்றனர்.

 

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.