தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cook With Comali: குக் வித் கோமாளி - வைல்டு கார்டு வின்னர் யார்?

Cook With Comali: குக் வித் கோமாளி - வைல்டு கார்டு வின்னர் யார்?

Aarthi V HT Tamil
Jul 08, 2023 01:03 PM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வைல்டு கார்டு வின்னர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி

ட்ரெண்டிங் செய்திகள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. போட்டி தீவிரமடைந்துள்ளது. இறுதியாக இப்போது முதல் 5 போட்டியாளர்கள் உள்ளனர்.

விசித்ரா, மைம் கோபி, ஸ்ருஷ்டி டாங்கே, கிரண் மற்றும் ஷிவாங்கி ஆகியோர் இறுதி சமையல் கிரீடத்திற்காக போட்டியிடுகின்றனர். நடிகை விசித்ரா இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தனது இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

போட்டி தீவிரமடைந்து இருக்கும் நிலையில், முதல் 5 போட்டியாளர்களான விசித்ரா, மைம் கோபி, ஸ்ருஷ்டி டாங்கே, டிஆர்கே கிரண் மற்றும் ஷிவாங்கி ஆகியோர் இறுதி சமையல் கிரீடத்திற்காக போட்டியிடுகின்றனர். நடிகை விசித்ரா இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தனது இடத்தைப் பிடித்தார்.

கூடுதலாக, வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களுக்கான போட்டி முடிவடையவில்லை. அரையிறுதியில் இருந்து இறுதிப் போட்டிக்கு வராதவர்களுக்கு வைல்டு கார்டு சுற்று காத்திருக்கிறது. நடிகை ஆண்ட்ரியான் வைல்ட் கார்டு வெற்றியாளராக வெளிப்பட்டு, இறுதிக் கட்டத்திற்கு சென்று இருப்பதாக சொல்லப்படுகிறது.

வெளிநாட்டு மற்றும் உள்ளூர் உணவு வகைகளில் நிபுணத்துவம் பெற்ற ஆண்ட்ரியான், இந்த நிகழ்ச்சியில் விதவிதாமன உணவுகளை செய்து அசத்தினார். அவரது எதிர்பாராத வெளியேற்றம் அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. ஆனால் அவர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது குறித்த சமீபத்திய செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்