தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Illaiyaraja: இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன் - கமல் ஹாசன் நெகிழ்ச்சி டுவிட்

HBD illaiyaraja: இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன் - கமல் ஹாசன் நெகிழ்ச்சி டுவிட்

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 02, 2023 11:52 AM IST

இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா.

இளையராஜா-கமல்
இளையராஜா-கமல்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமா இசையில் அசைக்க முடியா ஆளுமையாக வலம் வரும் இளைய ராஜா இன்று தனது 80வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் கட்சி வேறுபாடுகள் இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் திரைஉலக பிரபலங்கள் பலரும் இளைய ராஜாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இளையராஜாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது

திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இளையராஜாவின் அலுவகத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் அவரது டுவிட்டர் பக்கத்தில்,” காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா!

அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி!

அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை 'இசைஞானி' எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர்.

இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக - உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன்.

எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து!” என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்