வெளிப்படும் மோகினி உருவம், பழிவாங்க துடிக்கும் நிஷாந்தி..தியாவின் சபதம்!இந்த வாரம் மோகினி ஆட்டம் ஆரம்பம் எபிசோட் அப்டேட்
மூக்குத்தி இல்லாமல் சக்தியற்றவளாக மாறி வெளிப்படும் மோகினி உருவம். இதனால் பழிவாங்க துடிக்கும் நிஷாந்திக்கு எதிராக தியா சபதம் எடுக்க இந்த வாரம் மோகினி ஆட்டம் ஆரம்பம் எபிசோட் அப்டேட் பற்றி பார்க்கலாம்.

தமிழில் ஒளிபரப்பாகும் டிவி சீரியல்களில் திகில் கலந்த த்ரில்லர் தொடராக மோகினி ஆட்டம் ஆரம்பம் இருந்து வருகிறது. இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8:30 மணிக்கு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலின் வரும் வாரத்துக்கான எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்
தியாவை கொல்ல முயற்சிக்கும் நிஷாந்தி
நிஷாந்தி தன் மூக்குத்தி இல்லாமல் சக்தியற்றவளாக உணர்கிறாள்.இது அவளின் இயல்பான மோகினி உருவ நிலையை வெளிப்படுத்துகிறது. இதற்கிடையில், தியா மூக்குத்தியை கண்டுபிடித்து, வீட்டில் நடக்கும் பூஜையின் போது நிஷாந்தியின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த திட்டமிடுகிறாள். ஆனால், நிஷாந்தி, தியாவை தீயவளாய் சித்தரித்து, தனக்கு ஏற்பட்ட நிலையை மாற்றுகிறாள்.
பட படவென ஒரு முயற்சியில், நிஷாந்தி தியாவை கொல்ல முயல்கிறாள். ஆனால் கபிலா யோகினி அக்னிசூத்ராவைப் பயன்படுத்தி அவர்களின் ஆன்மாக்களை ஒன்றிணைத்து தியாவை காப்பாற்றுகிறார். இதற்குப் பிறகும், நிஷாந்தி தியாவை கொல்வேன் என்று உறுதியாக இருக்கிறாள்.