தமிழ் செய்திகள்  /  Entertainment  /  College Guy Mis Behaved With Actress Aparna Balamurali

Aparna Balamurali: நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடக்க முயன்ற மாணவர்

Aarthi V HT Tamil
Jan 19, 2023 02:43 PM IST

நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அபர்ணா பாலமுரளி
அபர்ணா பாலமுரளி

ட்ரெண்டிங் செய்திகள்

தங்கம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக சட்டக் கல்லூரிக்கு வந்திருந்தார் அபர்ணா பாலமுரளி. அவருடன் நடிகர் வினீத் சீனிவாசன், இசை அமைப்பாளர் பிஜிபால் மற்றும் சில பிரபலங்கள் மேடையில் இருந்தனர். இதற்கிடையில், ஒரு மாணவர் மேடையில் நுழைந்து தவறாக நடந்து கொண்டார்.

மாணவர், அபர்ணா பாலமுரளிக்கு மலர் கொடுக்க மேடைக்கு வந்தார். மாணவர் மேடைக்குள் நுழைந்தவுடன் பார்வையாளர்களிடமிருந்து கூச்சல் எழுந்தது. பூ கொடுத்துவிட்டு நடிகையின் கையை பிடித்து எழுந்து நிற்க வைக்க முயன்றார். அபர்ணா தயங்கியபோது, ​​அவர் கையை இழுத்தார். அபர்ணா எழுந்து நின்று புகைப்படம் எடுக்க முயன்றபோது அந்த இளைஞர் நடிகையின் தோளில் கை போட முயன்றார். 

இவரின் செயலை பார்த்து அபர்ணா பாலமுரளியின் முகத்தில் அதிருப்தி தெரிந்தது. ஆனாலும் மாணவன் அங்கிருந்து செல்லவில்லை. கையை பிடிப்பதும் தோளில் கை வைக்க முயன்றார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் அந்த மாணவன் மீது ரசிகர்களிடையே கடும் கோபம் எழுந்துள்ளது.

பலர் முன்னிலையில் தவறாக நடந்து கொண்ட மாணவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. 

சூரரைப் போற்று படத்தில் அபர்ணா பாலமுரளி தனது சிறப்பான நடிப்பிற்காக தேசிய விருது பெற்றார். தங்கம் படம் வரும் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனால் படக்குழுவினர் மிகவும் பிஸியாக விளம்பர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலையாளத்தில் தொடர்ந்து பிஸி ஹீரோயினாக வலம் வரும் அபர்ணா பாலமுரளி தற்போது ஃபஹத் ஃபாசிலுக்கு ஜோடியாக ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் தூம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துடன் மேலும் ஆறு படங்களை ஒப்புக்கொண்டுள்ளார் அபர்ணா பாலமுரளி.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்