பத்துகோடிக்கும் மேல் வீண்செலவு.. பாலாவுக்காக வந்த சூர்யா.. கடைசி வரை இருந்த சிவகுமார்.. சித்ரா லட்சுமணன் - தனஞ்செயன்
பத்துகோடிக்கும் மேல் வீண்செலவு.. பாலாவுக்காக வந்த சூர்யா.. கடைசி வரை இருந்த சிவகுமார்.. சித்ரா லட்சுமணன் - தனஞ்செயன் உரையாடல் பற்றிப் பார்ப்போம்.
கடந்த வாரத்தில் நடந்த சினிமா நிகழ்வுகள் குறித்து டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலில், பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணனும், புரொடியூசர் தனஞ்செயனும் கலந்துரையாடியவற்றைக் காணலாம்.
சித்ரா லட்சுமணன்: வணங்கான் திரைப்பட விழாவில் சூர்யா கலந்துகொள்ள எல்லா வாய்ப்பும் இருக்கிறது என்று சொல்லியிருந்தோம். அதேமாதிரி சூர்யா அந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இன்னும் சரியாக வணங்கான் பாலாவின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின்போது, சூர்யா அந்த விழாவில் கலந்துகொள்ளாமல் இருந்து இருந்தால் ஒரு நிறைவு இல்லாமல் தான் இருந்திருக்கும். பாலாவுடன் பணியாற்றிய நிகழ்வை சூர்யா பகிர்ந்துகொண்டதும் பார்க்க மிகவும் நன்றாக இருந்தது. எவ்வளவு நாட்களுக்கு சண்டை போட்டுக்கிட்டே இருக்குறது, அனைத்தையும் ஒரு இடத்தில் சமன் செய்திடணும். அதுதான் புத்திசாலித்தனம். அந்தப் பாதை எடுத்த சூர்யாவை நிச்சயமாக நாம் பாராட்டித்தான் ஆகணும்.
தனஞ்செயன்:
சூர்யா கூட ஒரு படம் ஆரம்பிச்சு, பாலா சார் ரொம்ப நாள் சூட் போயிட்டார். ஒரு நாள் இரண்டு நாள் இல்லை. கிட்டத்தட்ட பத்துகோடிக்கும் மேல் செலவு செய்றாங்க. ஒரு கட்டத்தில் சூர்யாவும் பாலா சாரும் பிரியுறாங்க. அதே படைப்பை பாலா சார் வந்து இன்னொரு புரொடியூசரோடு, இன்னொரு நாயகனோடு போகும்போது, சூர்யா சார் அந்தப் படத்தைப் பற்றியே கவலைப்படவில்லை. அது எவ்வளவு பெரிய விஷயம்.
சூர்யா சாருடைய மனசைப் பாருங்க. அதை பாராட்டித்தான் ஆகணும். எனக்கு எல்லாம் இப்படி எந்த புரொடியூசரும் விட்டுக்கொடுக்கலை. சினிமாவில் இது ரொம்ப குறைவு. என்னுடைய ஆதாரமே பாலா தான் என்பது போல் சூர்யா வந்தது பெரிய விஷயம்.
சித்ரா லட்சுமணன்: சூர்யாவை எல்லாம் தாண்டி, சிவகுமாருக்கு இயக்குநர் பாலா மீது மிகப்பெரிய சாஃப்ட் கார்னர் உண்டு. சேது படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் செய்திருக்கார் சிவகுமார். அதையெல்லாம்தாண்டி, எப்போதுமே பாலாவை தன் பையன்போல் தான் சிவகுமார் பார்க்கிறார்.
தனஞ்செயன்: சூர்யா சார் நிகழ்வில் பேசிட்டு, ஃபிளைட்டுக்கு நேரம் ஆச்சுன்னு கிளம்பிட்டார். அப்போது ஒவ்வொருத்தவங்களாக கிளம்புறாங்க. ஆனால், சிவகுமார் சார் கடைசிவரை நான் இருக்கணும்னு அமர்ந்திருக்கார். அப்படி இரவு 11 மணி வரை இருக்கார். ஊடகங்கள் எழுதுற மாதிரி எல்லாம் இல்லை. பாலா 25 எனும்போது நாங்கள் எல்லாம் இருப்போம்ன்னு இருந்திருக்காங்க.
சூர்யா சாருடைய மனசைப் பாருங்க. விமர்சிக்க செய்யும்போது, இதை பாராட்டியும்தான் ஆகணும். மணி சார் வந்து வாழ்த்தியதை மகிழ்கிறேன்.
சித்ரா லட்சுமணன்:
அதேபோல், சிவகார்த்திகேயன் வந்து பாராட்டியதும் பெருமையானது தான்.
தனஞ்செயன்: டைரக்டர் விஜய் சார், ராம் சார், லிங்குசாமி சார் எல்லாமே சேர்ந்து பல பேரை வரவழைச்சிருக்காங்க.
சித்ரா லட்சுமணன்: இப்படி ஒரு விழாவை பாலாவோடு நிறுத்திடக்கூடாது. பாலா மாதிரி பல கலைஞர்கள் இருக்காங்க. அப்படி மாதம் ஒரு விழா நடத்தலாம். அமைப்பு ரீதியாகப் பண்ணலாம்.
தனஞ்செயன்:
சிலர் இதை வைச்சு சம்பாதிக்கப் போறாங்கன்னு நினைச்சிடக் கூடாது. சென்னை ட்ரெட் சென்ட்டரில் செய்ததற்கு ரூ.75 லட்சம் முதல் 1 கோடி வரை செலவாகியிருக்கும். இதை யார் செய்வது. அப்படியென்றால், ஒரு ஸ்பான்ஷர் தேவைப்படுது. ஆனால், என்ன புரிதல் இருக்கு என்றால், இதை வைத்து சம்பாதிக்கப்போகிறார்கள் என்ற தவறான புரிதல் இருக்கு.
சித்ரா லட்சுமணன்: அஜித்துடைய திரைப்படங்கள் முன் பின் வருது. ஆனால், படங்கள் அடிக்கடி வருது.
சமீப காலமாக உடலைக் கண்ட்ரோல் செய்திட்டு இருக்கார். தமிழகத்தின் ஜேம்ஸ் பாண்ட் என்றால் அஜித் குமார். விடாமுயற்சி படத்தை இந்த மாதத்துக்குள் முடித்து, ரிலீஸுக்கு ரெடி பண்றாங்க. இந்தப் பொங்கலுக்கு பெரிய பெரிய படங்கள் எல்லாம் வருது’’ என முடித்தார், சித்ரா லட்சுமணன்.
நன்றி: டூரிங் டாக்கிஸ்
டாபிக்ஸ்