Top 10 Cinema News: 'தி கோட்' புரொமோ ரிலீஸ் முதல் 'பிகில்' கதை பிரச்னை வரை - டாப் 10 சினிமா நியூஸ்!-check out the the goat new promo release bigil story issue and other top 10 cinema news update on 04 september 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema News: 'தி கோட்' புரொமோ ரிலீஸ் முதல் 'பிகில்' கதை பிரச்னை வரை - டாப் 10 சினிமா நியூஸ்!

Top 10 Cinema News: 'தி கோட்' புரொமோ ரிலீஸ் முதல் 'பிகில்' கதை பிரச்னை வரை - டாப் 10 சினிமா நியூஸ்!

Karthikeyan S HT Tamil
Sep 04, 2024 08:06 PM IST

Top 10 Cinema News: 'தி கோட்' புரொமோ ரிலீஸ், 'போர் தொழில்' இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ், 'பிகில்' படக்கதை பிரச்னை உள்ளிட்ட இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Top 10 Cinema News: 'தி கோட்' புரொமோ ரிலீஸ் முதல் 'பிகில்' கதை பிரச்னை வரை - டாப் 10 சினிமா நியூஸ்!
Top 10 Cinema News: 'தி கோட்' புரொமோ ரிலீஸ் முதல் 'பிகில்' கதை பிரச்னை வரை - டாப் 10 சினிமா நியூஸ்!

மழை நிவாரணத்துக்கு நீளும் உதவிக்கரம்

கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகளின் முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் மகேஷ் பாபு ரூ.1 கோடியை நிவாரண நிதி வழங்கியுள்ளார். நடிகர் பிரபாஸ் இரு மாநிலங்களுக்கும் தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் 2 கோடி வழங்கியுள்ளார். நடிகர் சிரஞ்சீவியும் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதார்.

'தி கோட்' படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி

விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. வழக்கமாக திரையரங்குகளில் 4 காட்சிகள் திரையிடும் நிலையில் கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செப்.5 மற்றும் செப்.6 ஆகிய இரண்டு நாட்களுக்கு சிறப்புக் காட்சிக்கான அனுமதி கோரப்பட்ட நிலையில், ஒரு நாளுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பிக்பாஸில் கமல்ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி

பிக்பாஸ் தமிழ் 8ஆவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான புரொமோ வீடியோவும் விஜய் டிவி நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ளது.

4 நாள் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி

புதுச்சேரியில் அனைத்து திரையரங்குகளிலும் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் நாளை (செப்டம்பர் 05) வெளியாகிறது. நான்கு நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது.

'போர் தொழில்' இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்

'போர் தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

ஜாலியோ ஜிம்கானா டிரைலர்

பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ஜாலியோ ஜிம்கானா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இப்படத்தில் யோகி பாபு, அபிராமி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்

சுரேஷ், நதியா நடிப்பில் 'பூக்களை பறிக்காதீர்கள்', விஜயகாந்த், நதியா நடித்த 'பூ மழை பொழியுது' படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார். மறைந்த மோகன் நடராஜன் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

ரீ-ரிலீஸ் ஆகும் 'கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்'

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி வரவேற்பை பெற்ற ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது.

பிகில் பிரச்னை - அட்லீக்கு பறந்த உத்தரவு

விஜய் நடித்த பிகில் திரைப்படம் தொடர்பாக இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிகல் படம் தனது கதை என அம்ஜத் என்பவர் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.