Producer Mohan Natarajan: வில்லனாக நடிப்பில் மிரட்டியவர்..கமல், விஜய், சூர்யா, அஜித் பட தயாரிப்பாளர் மறைவு
Producer Mohan Natarajan: கமல், விஜய், சூர்யா, அஜித், விக்ரம் நடித்த படங்களின் தயாரிப்பாளரும், வில்லனாக நடிப்பில் மிரட்டியவருமான மோகன் நடராஜன் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மூத்த தயாரிப்பாளராக இருந்தவர் மோகன் நடராஜன். உலகநாயகன் கமல்ஹாசனின் மகாநதி படத்தை தயாரித்த இவர், அந்த படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.
உடல்நலம் பாதிப்பு
71 வயதாகும் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து நேற்று இரவு 10.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. வயது மூப்பு காரணமாக அவர் உயரிழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை சாலிகிராமத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், திருவொற்றியூரில் வைத்து அவரது இறுதி சடங்குகள் நடக்கிறது.
ஹிட் படங்களை கொடுத்தவர்
கடந்த 1986இல் மோகன் நதியா நடிப்பில் வெளிவந்த 'பூக்களைப் பறிக்காதீர்கள்' என்ற படத்தை தயாரித்து தமிழ் திரையுலகில் மோகன் நடராஜன் தயாரிப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து பிரபுவை வைத்து என் தங்கச்சி படிச்சவ, சத்யராஜை வைத்து வேலை கிடைச்சிடுச்சு, அருண்பாண்டியன் நடித்த கோட்டை வாசல் போன்ற படங்களை தயாரித்தார்.
ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கமலை வைத்து மகாநதி, விஜய்யை வைத்து கண்ணுக்குள் நிலவு, சூர்யாவை வைத்து வேல், அஜித்தை வைத்து ஆழ்வார், விக்ரமை வைத்து தெயவத்திருமகள் போன்ற பல படங்கள் தயாரித்துள்ளார்.
வில்லனாக மிரட்டல்
வில்லன் நடிகராகவும் பல படங்களில் நடிப்பில் மிரட்டியுள்ளார் மோகன் நடராஜன். மகாநதி படத்தில் கமலின் மகளை பாலியல் தொழிலில் தள்ளிவிடும் மிரட்டலான வில்லனாக நடித்திருப்பார். அதே போல் நம்ம அண்ணாச்சி, சக்கரைத்தேவன், கோட்டை வாசல், புதல்வன், அரண்மனை காவலன், பதவிப்பிரமாணம், பட்டியல் என பல படங்களில் வில்லத்தனமான கேரக்டர்களில் தோன்றியுள்ளார்.
உடல்நலம் பாதிப்பு காரணமாக சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்த மோகன் நடராஜன் தற்போது உயிரிழந்துள்ளார். செனனை சாலிகிராமத்தில் உள்ள நடிகரும், தயாரிப்பாளருமான மோகன் நடராஜன் வீட்டுக்கு சென்று நடிகர் சூர்யா அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சர்ச்சையில் சிக்கிய தெய்வத்திருமகள்
விக்ரம் நடிப்பில் இவர் தயாரித்த தெய்வத்திருமகள் படத்துக்கு முதலில் தெய்வத்திருமகன் என்றே தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் தலைப்பை பிரஸ் மீட் நிகழ்வின்போது அறிமுகப்படுத்தினர். அந்த நிகழ்வில் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் பங்கேற்று படம் குறித்து பேசினார்.
டைட்டில் வெளியீட்டுக்கு பின்னர் படத்தின் தலைப்பானது மறைந்த ஆன்மிகவாதி, சுதந்திர போராட்டத்தில் தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அழைக்கும் தெயவத்திருமகன் என்ற பெயரை வைத்திருப்பதோடு, ஹீரோ மனநலம் பாதிக்கப்பட்டவராக காட்டியிருப்பதற்கு குறிப்பிட்ட சமூகத்தினரால் ஆட்சோபனை தெரிவிக்கப்பட்டது.
இதனால் படத்தின் டைட்டில் விஷயத்தில் சர்ச்சை எழுந்த நிலையில் தெய்வத்திருமகன் என்ற தலைப்பை விக்ரமின் தெய்வத்திருமகன் என்று மாற்றினார்கள். இறுதியாக தெய்வத்திருமகள் என்று பட டைட்டிலை மாற்றி படத்தை வெளியிட்டார்கள். இந்த படத்துக்கு பின்னர்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்