Tamil Movies: ரஜினியின் ஊர்க்காவலன்..ரஜினி ஹிட் பட டைட்டிலில் இரண்டு படங்கள் - செப்டம்பர் 4இல் வெளியான தமிழ் படங்கள்
Tamil Movies Released on Sep 4: ரஜினிகாந்தின் ஊர்காவலன், ரஜினியின் சூப்பர் ஹிட் டைட்டிலை பயன்படுத்தி இரண்டு படங்கள் என செப்டம்பர் 4ஆம் தேதி தமிழில் படங்கள் வெளியாகியுள்ளன. மற்றபடி பெரிய ஸ்டார்கள், சூப்பர் ஹிட் படங்கள் பெரிதாக இந்த நாளில் வெளியாகவில்லை.
செப்டம்பர் 4ஆம் தேதியான இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஹிட் கொடுத்த ஊர்காவலன் படம் வெளியானது. இதுதவிர பெரிய ஸ்டார்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
செப்டம்பர் 4இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட் பற்றி பார்க்கலாம்
அனாதை ஆனந்தன்
கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் ஏ.வி.எம். ராஜன், முத்துராமன், ஆர்.எஸ். மனோகர், அஞ்சலி தேவி, ஜெயலலிதா பிரதான கேரக்டரில் நடித்த படம் அனாத ஆனந்தன்.
ஒரே நேரத்தில் தமிழுடன், இந்தியிலும் இந்த படம் உருவானது. படத்தில் கண்ணதாசன் பாடல் வரிகளில் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற்றன.
ஜெயலலிதா மற்றும் அனாதை சிறுவனாக நடித்த மாஸ்டர் சேகர் ஆகியோருக்கு இடையிலான காட்சி ரசிகர்கள் பெரிது கவர்ந்தது. ஜெயலலிதா சினிமா கேரியரில் அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய படங்களில் ஒன்றாக இது அமைந்தது. ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்த குடும்ப திரைப்படமான அனாதை ஆனந்தன் வெளியாகி 54 ஆண்டுகள் ஆகிறது.
ஊர்க்காவலன்
மறைந்த இயக்குநர், நடிகர் மனோபாலா இயக்கத்தில் உருவான ஊர்க்காவலன் படத்தில் ரஜினிகாந்த், ராதிகா சரத்குமார், பாண்டியன், ரகுவரன், சங்கிலி முருகன், மலேசியா வாசுதேவன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்,
படத்தின டைட்டிலுக்கு ஏற்ப வில்லன்களிடமிருந்து ஊரை காப்பாற்றி, தனது சகோதரரை கொன்றவர்களை ஹீரோ பழிவாங்குவது தான் கதை. படத்தில் ரஜினியின் வித்தியாச ஹேர்ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்தது.
ரஜினி ரசிகர்களை திருத்திப்படுத்தும் விதமான திரைக்கதையுடன் இருந்த இந்த படம் 100 நாள்கள் வரை ஓடி ஹிட்டாக அமைந்தது.
இந்த படத்தில் சிற்பியை இசையமைப்பாளராக அறிமுகம் செய்ய மனோபாலா முடிவு செய்திருந்தார். ஆனால் சில காரணங்களால் படத்துக்கு சங்கர் கணேஷ் இசையமைத்தார். படத்தில் இடம்பிடித்த மாசி மாசம்தான், எடுத்த சபதம், மேளம் கொட்டு தாலி கட்டு போன்ற பாடல்கள் ஹிட்டாகின. ரஜினியின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த ஊர்க்காவலன் வெளியாகி இன்றுடன் 37 ஆண்டுகள் ஆகிறது.
நினைத்தாலே இனிக்கும்
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான கிளாஸ்மேட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்காக நினைத்தாலே இனிக்கும் வெளியானது. ஜி.என்.ஆர். குமாரவேல் இயக்கிய இந்த படத்தில் பிருத்விராஜ் சுகுமாறன் மலையாளத்தில் நடித்த கேரக்டரில் தமிழிலும் நடித்திருப்பார்.
சக்தி வாசு, பிரியாமணி, கார்த்திக் குமார், அனுஜா ஐயர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரிய நடிகர்கள் இல்லாத இந்த படம், விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சூப்பர் ஹிட்டானது.
விஜய் ஆண்டனி இசையமைப்பில் அழகாய் பூக்குதே, செக்ஸி லேடி, பியா பியா போன்ற பாடல்கள் ஹிட்டாகின. 1979இல் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடித்து நினைத்தாலே இனிக்கும் என்ற டைட்டிலை மறுபடியும் இந்த படத்துக்கு பயன்படுத்தி இருந்தனர். பெரிய ஸ்டார்கள் இல்லாமல் ஹிட்டடித்த இந்த படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிறது.
பாயும் புலி
விஷால் - சுசீந்திரன் காம்போவில் உருவான ஆக்ஷன் த்ரில்லர் பக்கா கமர்ஷியல் படமாக பாயும் புலி அமைந்திருந்தது. காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருப்பார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் சமுத்திரகனி சைலண்ட் வில்லனாக மிரட்டியிருப்பார். வேல மூர்த்தி, ஜெயப்பிரகாஷ், ஆர்.கே., உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள். டி.இமான் இசையில் படத்தின் பாடல்களும் அனைத்து சூப்பர் ஹிட்டானது.
1983இல் வெளியான ரஜினியின் சூப்பர் ஹிட் பட டைட்டிலான பாயும் புலி என்ற தலைப்பை இந்த படத்தில் மீண்டும் பயன்படுத்தியிருப்பார்கள். இதையடுத்து இந்த படம் கலவையான விமர்சனங்களுடன் சராசரி ஹிட் ஆனது. படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்