Top Songs Today: அஜித்துக்கும் விநாயருக்கு இடையிலான பாச பிணைப்பு..தமிழ் சினிமாவில் டாப் விநாயகர் பாடல்கள் லிஸ்ட்-check out the list of top vinayagar songs in tamil movies - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Songs Today: அஜித்துக்கும் விநாயருக்கு இடையிலான பாச பிணைப்பு..தமிழ் சினிமாவில் டாப் விநாயகர் பாடல்கள் லிஸ்ட்

Top Songs Today: அஜித்துக்கும் விநாயருக்கு இடையிலான பாச பிணைப்பு..தமிழ் சினிமாவில் டாப் விநாயகர் பாடல்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 07, 2024 08:18 AM IST

Tamil Movie Vinayagar Songs: அஜித்துக்கும் விநாயருக்கு இடையில் ஒரு வித பாச பிணைப்பு இருப்பதை வெளிக்காட்டும் விதமாக அவரது படங்களில் விநாயகர் பாடல் அதிகமுறை இடம்பிடித்துள்ளது. தமிழ் சினிமாவில் டாப் விநாயகர் பாடல்கள் லிஸ்டை பார்க்கலாம்

Top Songs Today: அஜித்துக்கும் விநாயருக்கு இடையிலான பாச பிணைப்பு..தமிழ் சினிமாவில் டாப் விநாயகர் பாடல்கள் லிஸ்ட்
Top Songs Today: அஜித்துக்கும் விநாயருக்கு இடையிலான பாச பிணைப்பு..தமிழ் சினிமாவில் டாப் விநாயகர் பாடல்கள் லிஸ்ட்

இந்த பாடல்கன் அனைத்தும் விநாயகரை குறிப்பதோடு மட்டுமல்லாமல், வெளியான காலகட்டத்தில் பட்டதொட்டியெங்கும் ஒலித்த பாடல்களாக இருந்துள்ளன. குறிப்பாக அஜித்குமார் அதிக முறை தனது படங்களில் விநாயகரை ரெபரன்ஸ் வைத்த ஹீரோவாக உள்ளார். அந்த வகையில் அவருக்கும், விநாயகருக்கும் நல்ல பிணைப்பு உள்ளது என்றே கூறலாம்.

தமிழ் சினிமாவில் ஹிட்டான விநாயகர் பாடல்களின் லிஸ்ட் இதோ

அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து ஆர். தியாகராஜன் இயக்கத்தில் ஆக்‌ஷன் சாகச திரைப்படமாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அன்னை ஒர் ஆலயம். இந்தியில் ஹிட்டடித்த மா என்ற படத்தில் ரீமேக்காக இது உருவானது. ஸ்ரீபிரியா, அஞ்சலி தேவி, மோகன் பாபு, நாகேஷ் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தில், வாலி பாடல் வரிகள் எழுத இளையராஜா இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசிலா பாடிய அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே என தனது வளர்ப்பு யானையுடன் ரஜினி பாடி ஆடும் இந்த பாடல் சூப்பர் ஹிட்டானது.

முந்தி முந்தி விநாயகனே

தமிழ் சினிமாவின் மெகா ஹிட் படமாக ஒரு ஆண்டு வரை திரையரங்குகளில் ஓடிய படம் கரகாட்டக்காரன். ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்தை கங்கை அமரன் இயக்கியுள்ளார். கங்கை அமரன் பாடல்வரிகள் எழுத இளையராஜா இசையில் கரகாட்டம் குறித்த இண்ட்ரோ பாடலாக வரும் முந்தி முந்தி விநாயகரே என்ற இந்த பாடல் இன்று வரையில் விநாயகர் சதுர்த்தி விழாக்களில் தவறாமல் ஒலிக்கும் பாடலாக இருந்து வருகிறது.

பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்ப்பா

அஜித்குமார், ஸ்வாதி, வடிவுக்கரசி, விஜய் கிருஷ்ணராஜ் உள்பட பலர் நடித்திருக்கும் ரெமாண்டிக் ட்ராமா படம் வான்மதி. வாலி பாடல் வரிகள் எழுத தேவா இசையமைத்து, அவரே பாடிய பிள்ளையார் பட்டி ஹீரோ நீதான்ப்பா என்ற பாடலில் அஜித்தின் அல்டிமேட் நடனத்துடன் அமைந்திருக்கும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சாமி வருது சாமி வருது வழிய விடுங்கடா

சத்யராஜ், ரஹ்மான், சுகன்யா, கஸ்தூரி, திலகன் உள்பட பலர் நடித்த உடன்பிறப்பு என்ற படத்தை பி. வாசு இயக்கியிருப்பார். இந்த படத்தில் சகோதரர்காக வரும் சத்யாராஜ் - ரஹ்மான் இணைந்த டான்ஸ் ஆட விநாயகர் ஊர்வலத்தின்போது வரும் பாடலாக சாமி வருது சாமி வருது வழிய விடுங்கடா பாடல் உள்ளது. வாலி பாடல் வரிகள் எழுத இளையராஜா இசையமைப்பில் மனோ, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த பாடலை பாடியிருப்பார்கள்

மகா கணபதி

சரண் இயக்கத்தில் அஜித்தின் 25வது படமாக வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பிய படம் அமர்க்களம். இந்த படத்தில் லாரன்ஸ் நடனமாட விநாயகர் சதுர்த்த பாடலாக மகா கணபதி பாடல் இடம்பிடித்திருக்கும். வைரமுத்து பாடல் வரிகள் எழுத பரத்வாஜ் இசையில் விநாயகர் பாடல் என்றாலே நினைவுக்கு வரும் விதமாக இந்த பாடல் உள்ளது

வேல விநாயகா சக்தி விநாயகா

அஜித்தின் மற்றொரு விநாயகர் பாடலாக வேதாளம் படத்தில் இடம்பிடித்திருக்கு் வீர விநாயக பாடல் உள்ளது. சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இந்த படத்தில் விநாயகர் சதுர்த்தியில் இடம்பெறும் பாடலாக உள்ளது. விவேகா பாடல் வரிகள் எழுத அனிருத் இசையமைத்து, பாடியிருப்பார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பாடலாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.