‘அஜித் வேதாளம் எங்கே.. சிரஞ்சீவி போலா சங்கர் எங்கே’ ‘க்ரின்சோ க்ரின்ச்’ ப்ளூ சட்டை அட்டாக்!
தம்பி பவன் கல்யாண் நடிச்ச குஷி படத்தோட சீன் ஒன்றை, ரெபரன்ஸ்க்கு வெச்சிருக்காங்க. ‘இதெல்லாம் பெரிய மனுஷன் பண்ற வேலையா?’
வேதாளம் தெலுங்கு ரீமேக் , போலா சங்கர் திரைப்படம் ஜெயிலர் படத்தோடு வெளியாகியிருக்கும் நிலையில், படத்தின் விமர்சனத்தை பிரபல யூடியூப்பர் ப்ளூ சட்டை மாறன் கிழித்து எறிந்திருக்கிறார். இதோ அவருடைய விமர்சனம்:
‘‘வேதாளம் படத்தோட ரீமேக் தான் போலா சங்கர். அப்பாவி டாக்ஸி டிரைவராக சிரஞ்சீவி. தன் தங்கையை அழைத்து வந்து கொல்கத்தாவில் குடியேறி, அங்கு தங்கையை கல்லூரியில் சேர்த்து விடுகிறார். போலீசார் டாக்ஸி டிரைவர்களிடம் சில குற்றவாளிகளை அடையாளம் காட்ட உதவுமாறு கோரிக்கை வைக்கின்றனர்.
சிரஞ்சீவி இருவரை காட்டிக் கொடுக்கிறார். இதனால் ரவுடிகளுக்கு சிரஞ்சீவி மீது கோபம். அப்பாவி ஹீரோவை தூக்கிட்டு போயிடுறாங்க, அங்கே போன பிறகு தான் தெரியுது, ஹீரோ அவர்களிடம் மாட்டவில்லை, அவர்கள் தான் ஹீரோவிடம் மாட்டிக் கொள்கிறார்கள். இப்படி தான் கதை போகுது.
முதல் பாதியை பார்க்கும் போது பாட்ஷா மாதிரி இருக்கே என்று தோன்றும், ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கும். பாட்ஷாவில் ஹீரோ ஆட்டோ ஓட்டுவார். இதில் ஹீரோ டாக்ஸி ஓட்டுறார். இது தான் வித்தியாசம் .
வேதாளம் ரிவியூவில் இதை தான் விடிய விடய சொல்லியிருந்தோம். இப்போ அதையே தான் இதுக்கு சொல்றோம். சரி, அதையே தான் படமா எடுத்துறாங்களா? படத்தின் ப்ரமோஷனில் அதன் இயக்குனர் சொல்லியிருந்தார், ‘வேதாளம் படத்தில் நிறைய க்ரின்ச் சீன் இருந்தது.. அதை நீக்கிட்டு, புதிய சீன் வைத்திருக்கிறோம்’ என்று கூறியிருந்தார்.
ஆர்வமா போய் பார்த்தா, க்ரின்ச் சீன்களை நீக்கியது உண்மை தான். ஆனால், அதை விட மோசமான க்ரின்ச் சீன்களை வைத்து படத்தை எடுத்திருக்காங்க. படத்தை கண்ணைக் கொண்டு பார்க்க முடியல.
வேதாளம் படம் அதிர பழசா இருந்தாலும் அதை ரசிக்க காரணம், சிவாவின் திறமையான இயக்கமும், திரைக்கதையும் தான். அதில் சுவாரஸ்யம் இருந்துது. ஹீரோவா அஜித், பிரமாதமா பண்ணிருப்பார். அஜித் பண்ண எந்த விசயத்தையும், சிரஞ்சீவி மேட்ச் பண்ண முடியல.
இடைவேளையில் அஜித் அப்பாவியாக இருந்து ஆக்ரோஷமா மாறுவார். அந்த சீன் அஜித் செம்மையா பண்ணிருப்பார். அந்த மாதிரி பண்ணா, க்ரின்ச் ஆகியிரும்னு நெனச்சிட்டு, அதை பண்ணாமல மொக்கையா ஒரு எண்ட்ரி கொடுத்திருக்காங்க.
அது மட்டும் மொக்கைனு பார்த்தா, எல்லா ஆக்ஷன் சீனிலும் கனெக்ஷன் இல்லாமல் மொக்கையா இருக்கு. வேதாளத்தில் அனிருத் இசை, ரொம்ப பொருத்தமாக இருந்தது. தெலுங்கில் இசை சுத்தமா செட் ஆகல.
தம்பி பவன் கல்யாண் நடிச்ச குஷி படத்தோட சீன் ஒன்றை, ரெபரன்ஸ்க்கு வெச்சிருக்காங்க. ‘இதெல்லாம் பெரிய மனுஷன் பண்ற வேலையா?’ என்று தான் பார்த்தால் தோன்றும்.
படம் முழுக்க பவன் கல்யாண் பாட்டை தான் சிரஞ்சீவி பாடிட்டு திரிகிறார். கேட்டா, க்ரின்ச் சீன்ஸ் எல்லாத்தையும் நீக்கிட்டோம்னு சொல்றாங்கே. வேதாளம் படத்தின் போது, அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல பொதுவான ரசிகர்களையும் திருப்திபடுத்தும் என்று சொல்லியிருந்தேன். இந்த படம் சிரஞ்சீவி ரசிகர்களை தவிர வேறு யாரும் பார்க்கவே முடியாது,’’
என்று தன்னுடைய விமர்சனத்தில் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்