Tamil OTT Releases: பெரிய ஸ்டார்கள் இல்லை..இந்த வார ஓடிடி ரிலீஸ் ஆக நான்கு புதிய தமிழ் படங்கள் - இதோ லிஸ்ட்-check out the list of tamil ott releases in this week - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Ott Releases: பெரிய ஸ்டார்கள் இல்லை..இந்த வார ஓடிடி ரிலீஸ் ஆக நான்கு புதிய தமிழ் படங்கள் - இதோ லிஸ்ட்

Tamil OTT Releases: பெரிய ஸ்டார்கள் இல்லை..இந்த வார ஓடிடி ரிலீஸ் ஆக நான்கு புதிய தமிழ் படங்கள் - இதோ லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 13, 2024 08:50 PM IST

Tamil OTT Releases This Week: இந்த வாரத்தில் நான்கு புதிய தமிழ் படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளது. பெரிய ஸ்டார்கள் படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படமாக இவை அமைந்துள்ளன. இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் தமிழ் படங்கள் எவை என்பதை பார்க்கலாம்

Tamil OTT Releases: பெரிய ஸ்டார்கள் இல்லை..இந்த வார ஓடிடி ரிலீஸ் ஆக நான்கு புதிய தமிழ் படங்கள் - இதோ லிஸ்ட்
Tamil OTT Releases: பெரிய ஸ்டார்கள் இல்லை..இந்த வார ஓடிடி ரிலீஸ் ஆக நான்கு புதிய தமிழ் படங்கள் - இதோ லிஸ்ட்

ஆனாலும் பிரபல ஓடிடி தளங்களில் வழக்கம்போல் வரிசை கட்டி புதிய படங்கள் ஸ்டிரீம் ஆக தொடங்கியுள்ளன. அதன்படி ஓடிடி தளங்களில் வெளியாகியிருக்கும் தமிழ் படங்கள் எவை என்பதை பார்க்கலாம்

ரகு தாத்தா

கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடிக்க எம்எஸ் பாஸ்கர், ரவீந்திரா விஜய் உள்பட பலர் நடித்து அரசியல் காமெடி ட்ராமா பாணியில் உருவாகியிருக்கும் ரகு தாத்தா கடந்த மாதம் 15ஆம் தேதி வெளியானது.

கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் ரசிகர்கள் கவர்ந்த இந்த படம் இன்று முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகிறது. தி பேமிலி மேன், கன்ஸ் ஆஃப் குலாப் போன்ற வெப்சீரிஸ்களின் திரைக்கதை ஆசிரியர் சுமன் குமார் ரகு தாத்தா படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

டீன்ஸ்

பார்த்திபன் இயக்கி, நடித்திருக்கும் டீன்ஸ் படத்தில் இளம் டீன் ஏஜ் நடிகர்கள் பலர் நடித்துள்ளார்கள். பிக் பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகாவும் இந்த படத்தில் நடித்துள்ளார்.

சயின்ஸ் பிக்சன் பாணியில் விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் டீன்ஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

நண்பன் ஒருவன் வந்த பிறகு

விடுதலை புகழ் பவானிஸ்ரீ, யூடியூப் பிரபலம் மதன் கெளரி, ஆர்ஜே ஆனந்தி பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை ஆனந்த ராம் இயக்கி, நடித்துள்ளார். ப்ரண்ட்ஷிப், லவ், ரீயூனியன் போன்ற விஷயங்களுடன் ஃபீல் குட் படமாக உருவாகியிருக்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது

கோலி சோடா ரைசிங்

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கித்தில் 2014இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான கோலி சோடா படத்தின் கிளைக்கதையாக கோலி சோடை ரைசிங் என்ற பெயரில் வெப்சீரிஸாக இது உருவாகியுள்ளது.

இந்த சீரிஸில் இயக்குநர் சேரன், நடிகர் ஷாம், நடிகை ரம்யா நம்பீசன், விஜய் டிவி பிரபலம் புகழ் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். இந்த சீரிஸின் முதல் மூன்று எபிசோடுகள் தற்போது வெளியாகியிருக்கும் நிலையில், அடுத்தடுத்த வாரங்களில் மற்ற எபிசோடுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தெலுங்கில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான மிஸ்டர் பச்சன் படம் நெட்பிளக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மாஸ் மகாராதா ரவிதேஜா, பாக்யஸ்ரீ போர்ஸ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ரெய்ட் படத்தின் ரீமேக்காக இது உருவாகியுள்ளது.

அதேபோல் மலையாளத்தில் பிரபல இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், பேசில் ஜோசப் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க க்ரைம் காமெடி படமாக உருவாகியிருக்கும் நுனக்குழி, ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.