Mazhai Pidikatha Manithan: என் படத்தை காலி பண்ணிட்டாங்க.. எனக்கும் அதுக்கும் சம்பந்தமே கிடையாது’- கதறும் விஜய் மில்டன்!-vijay milton release video after vijay antony mazhai pidikatha manithan press show he says opening scene changed totally - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mazhai Pidikatha Manithan: என் படத்தை காலி பண்ணிட்டாங்க.. எனக்கும் அதுக்கும் சம்பந்தமே கிடையாது’- கதறும் விஜய் மில்டன்!

Mazhai Pidikatha Manithan: என் படத்தை காலி பண்ணிட்டாங்க.. எனக்கும் அதுக்கும் சம்பந்தமே கிடையாது’- கதறும் விஜய் மில்டன்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 02, 2024 08:24 PM IST

Mazhai Pidikatha Manithan: அப்படி முதலிலேயே கதையின் கருவை சொல்லிவிட்டால், இந்தப் படத்தை எப்படி நாம் பார்க்க முடியும். அதற்காகவா நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு படத்தை எடுத்தோம். - கதறும் விஜய் மில்டன்!

Mazhai Pidikatha Manithan:  ‘இப்படி காலி பண்ணகூடாது.. எனக்கு அதுக்கும் சம்பந்தமே கிடையாது’- கதறும் விஜய் மில்டன்!
Mazhai Pidikatha Manithan: ‘இப்படி காலி பண்ணகூடாது.. எனக்கு அதுக்கும் சம்பந்தமே கிடையாது’- கதறும் விஜய் மில்டன்!

அதிர்ச்சிக்குள்ளானேன்

அந்த வீடியோவில், “மீடியா நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பொதுவாகவே நான் பத்திரிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்படும் காட்சியில் இருக்கமாட்டேன். முதல் நாள், பட ரிலீஸ் சம்பந்தமான டென்ஷன் இருக்கும் என்பதால், எங்கேயாவது சென்று விடுவேன். ஆனால் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை பொருத்தவரை, படம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்பது குறித்து பார்ப்பதற்காகவே, பத்திரிக்கையாளர் காட்சியில் அமர்ந்தேன்.

இந்தப் படத்தின் ஹீரோ யார்? அவன் ஒரு டாக்டரா அடியாளா..? உள்ளிட்ட கேள்விகளை வைத்துதான் இந்த கதையை நான் எழுதியிருந்தேன். மர்மமாக ஒருவன் வந்து இறங்குகிறான். அவனுக்கு தலையில் அடிபட்டு இருக்கிறது. அவனுக்கு ஏன் அடிபட்டு இருக்கிறது அவனுக்கு பின்னால் யார் இருக்கிறார்..? இதற்கிடையில் வரும் சரத்குமார் யார்?

அமைச்சர் ஒருவர் சென்னையில் தேடபபடுவது ஏன்? அவனை காப்பாற்ற முயற்சி செய்பவர்கள் யார் யார்? அவனைத் தேடி வருகிறவர்கள் யார் யார்? உள்ளிட்ட கேள்விகளைக்கொண்டே இந்தப்படத்தின் திரைக்கதையை நான் நகர்த்திக் கொண்டு சென்றிருந்தேன். ஆனால் படத்தை பத்திரிகையாளர்களுக்கான காட்சியில் நான் பார்க்கும் பொழுது, அதிர்ச்சிக்கு உள்ளானேன்.

ஒரு நிமிட காட்சியில்தான் பிரச்சினை

காரணம் என்னவென்றால், படத்தின் முன் பகுதியில் ஒரு நிமிடத்திற்கு காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. படத்தின் இயக்குநராக அந்த காட்சிகளை நான் படத்தில் வைக்கவில்லை. அந்த காட்சிகள் எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை. அந்த ஒரு நிமிட காட்சியில் அவன் யார்? அவனுடைய பின்னணி என்ன? உள்ளிட்டவற்றை முழுவதுமாக சொல்லிவிட்டார்கள். அப்படி முதலிலேயே கதையின் கருவை சொல்லிவிட்டால், இந்தப் படத்தை எப்படி நாம் பார்க்க முடியும். அதற்காகவா நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு படத்தை எடுத்தோம். இப்படி ஒரு சீன் வருகிறது என்றால் அதற்கு ஏற்றவாறு நான் திரைக்கதையை மாற்றி எழுதியிருப்பேன்.

சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தில் இயக்குநரின் அனுமதி இல்லாமல், ஒரு நிமிட காட்சிகளை வைப்பதற்கு யார் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார் என்று தெரியவில்லை. இப்படி ஒரு படத்தை காலி செய்ய கூடாது. உங்களிடம் நான் ஒரு கோரிக்கை வைத்துக் கொள்கிறேன். தயவுசெய்து அந்த ஒரு நிமிடத்தை மறந்து விட்டு, நீங்கள் இந்தப்படத்தை ஓட்டி பாருங்கள். படம் உங்களுக்கு விறுவிறுப்பாக செல்லும்.

எந்தவித சம்பந்தமும் கிடையாது.

நான் திரைக்கதையில் அவன் யார் என்பதை கருவாக வைத்து, சின்ன சின்ன மர்ம முடிச்சிகளை வைத்திருக்கிறேன். ஆனால் அந்த ஒரு நிமிட காட்சியில், அந்த காட்சிகளுக்கான காரணங்கள் அனைத்தும் முன்னமே தெரிந்து விட்டது. அப்படி பார்க்கும் பொழுது படம் பார்க்கக்கூடிய பார்வையாளர்கள் காட்சி நகரும் பொழுது, இவைதான் எங்களுக்கு முன்னமே தெரியுமே என்ற ரீதியில் தான் படத்தை பார்ப்பார்கள்.

நான் இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் அதற்குள் ஆழமாக செல்ல விரும்பவில்லை. ஆகையால், இந்தப்படம் குறித்தான விமர்சனங்களையோ அல்லது கருத்துக்களையோ நீங்கள் வெளியிடும் பொழுது, படத்தின் முன் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு நிமிடத்தை மறந்து விட்டு, வெளியிடுங்கள். அதை நான் படத்தில் வைக்கவில்லை. அதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.” என்று பேசி இருக்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.