Ban For Teenz Movie: விஷுவல் எபெக்ட்ஸ் பணி தாமதம்! பார்த்திபன் புகாருக்கு பதிலடியாக டீன்ஸ்க்கு தடை கோரி வழக்கு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ban For Teenz Movie: விஷுவல் எபெக்ட்ஸ் பணி தாமதம்! பார்த்திபன் புகாருக்கு பதிலடியாக டீன்ஸ்க்கு தடை கோரி வழக்கு

Ban For Teenz Movie: விஷுவல் எபெக்ட்ஸ் பணி தாமதம்! பார்த்திபன் புகாருக்கு பதிலடியாக டீன்ஸ்க்கு தடை கோரி வழக்கு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 06, 2024 12:46 PM IST

டீன்ஸ் பட விஷுவல் எபெக்ட்ஸ், கிராபிக்ஸ் பணிகளை தாமதப்படுத்தியதாக சிவபிரசாத் என்பவர் மீது பார்த்திபன் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சிவபிரசாத் தரப்பில் படத்தின் ரிலீஸுக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பார்த்திபன் புகாருக்கு பதிலடியாக டீன்ஸ்க்கு தடை கோரி வழக்கு
பார்த்திபன் புகாருக்கு பதிலடியாக டீன்ஸ்க்கு தடை கோரி வழக்கு

டீன்ஸ் படத்தில் யோகிபாபு, நடிகை வனிதாவின் மகள் ஜோஷிகா உள்பட பல்வேறு டீன் ஏஜ் புதுமுக நடிகர், நடிகைகளை வைத்து படத்தை இயக்கியிருந்தார் பார்த்திபன்.

விஷுவல் எபெக்ட்ஸ் பணியில தாமதம்

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் சாலையில் உள்ள ஸ்டுடியோவில் டீன்ஸ் படத்துக்கு விஷுவல் எபெக்ட்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தன.

இதற்காக ஸ்டூடியோவின் மேற்பார்வையாள சிவபிரசாத் என்பவரிடம் படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிக்கு ரூ.68 லட்சத்து 54 ஆயிரத்து 400 தொகை செலவாகும் என மதிப்பீடு செய்து. அத்துடன் இந்த பணிகள் பிப்ரவரி மாதத்தில் செய்து கொடுக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக ரூ.42 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

ஆனால், வாக்குறுதி அளித்தபடி படத்துக்கான விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை சிவபிரசாத் தரப்பினர் செய்து தரவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து ஏப்ரல் மாதத்துக்குள் முடித்து கொடுப்பதாகவும், அதற்கு, முன்னர் கூறியதைவிட கூடுதலாக ரூ.88 லட்சத்து 38 ஆயிரத்து 120 தொகை செலவாகும் என கூறப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக டீன்ஸ் படத்தின் வெளியீடானது தாமதமாகியுள்ளது.

போலீசிடம் நடிகர் பார்த்திபன் புகார்

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் பார்த்திபன் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அதில், ‘பணத்தை பெற்றுக் கொண்டு, கூறியபடி படத்துக்கான விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை செய்து கொடுக்காமல், கூடுதல் பணம் கேட்கும் சிவபிரசாத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீசார், சிவபிரசாத் மீது மோசடி, ஏமாற்றுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டீன்ஸ் படத்துக்கு தடை கோரி வழக்கு

பார்த்திபன் புகாருக்கு பதிலடியாக சிவபிரசாத் தரப்பில் இருந்து டீன்ஸ் படத்துக்கு தடை கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பார்த்திபன் தரப்பினர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டீன்ஸ் திரைப்படம்

த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் டீன்ஸ் இளைஞர்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் பார்த்திபனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

படத்தில் இருந்து பிப்ளி பிப்ளி பிளி பிளி என்ற சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் படத்தின் ட்ரெய்லர் வெளியாக படம் மீதான எதிர்பார்ப்பையும் ஏற்புடுத்தியது.

இந்தியன் 2 போட்டியாக ரிலீஸ்

உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 ரிலீஸ் ஆக ஜுலை 12ஆம் தேதி டீன்ஸ் படமும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது எழுந்திருக்கும் விஷுவல் எபெக்ட்ஸ் பிரச்னை காரணமாக படத்தின் ரிலீஸ் மேலும் தள்ளிப்போவதற்கான வாய்ப்பு உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.