HBD Vidyasagar : துள்ளல், மெலோடி எதிலும் வித்யாசமான பாணி இசைக்கு சொந்தக்காரர்! வித்யாசாகர் பிறந்த தினம்!
HBD Vidyasagar : துள்ளல், மெலோடி எதிலும் வித்யாசமான பாணி இசைக்கு சொந்தக்காரர்! வித்யாசாகர் பிறந்த தினம்!

வித்யாசாகர், இந்திய இசையமைப்பாளர், 1963ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி பிறந்தார். இசையமைப்பாளர் மட்டுமின்றி பாடகரும் ஆவார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் அதிகம் பணிபுரிந்துள்ளார். சில இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த பின், 1989ம் ஆண்டு பூ மணம் என்ற படத்தின் மூலம் இவர் சினிமா இசைக்கு அறிமுகமானார்.
இவரை மெல்லிசை மன்னர் என்று அழைப்பார்கள். இவர் 225 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தேசிய விருது, மாநில விருதுகள் மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் நடிகர் விஜயுடன் சேர்ந்து பணிபுரிந்த அனைத்து படங்களும் இவருக்கு ஹிட். வரலாற்று சிறப்புமிக்க இசையமைப்பாளர்.
இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விழியநகரம் ஆகும். ராமச்சந்தர் மற்றும் சூர்யகாந்தம் இவரது பெற்றோர். இவர்கள் குடும்பத்தினர் சென்னையில் தங்கிவிட்டனர். இவரது தந்தையும் இசையமைப்பாளர். இவர் கர்நாடக இசையை முதலில் கற்றுக்கொண்டார். பின்னர் கிட்டார், பியானோ இசை கருவிகளையும் இசைக்க கற்றுக்கொண்டார்.