Hit Tamil movies Disney plus Hotstar: சித்தா, கமலின் விக்ரம்..டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்-check out the list of super hit movies streaming in disney plus hotstar ott platform - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hit Tamil Movies Disney Plus Hotstar: சித்தா, கமலின் விக்ரம்..டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்

Hit Tamil movies Disney plus Hotstar: சித்தா, கமலின் விக்ரம்..டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 22, 2024 09:08 AM IST

Hit Tamil movies Disney plus Hotstar: சித்தா, கமலின் விக்ரம் முதல் அதிகம் பேர் பார்க்கூடிய ஓடிடி தளமாக இருந்து வரும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இடம்பிடித்திருக்கும் சூப்பர் ஹிட் தமிழ் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.

Top Tamil movies Disney plus Hotstar: சித்தா, கமலின் விக்ரம்..டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்
Top Tamil movies Disney plus Hotstar: சித்தா, கமலின் விக்ரம்..டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்

தமிழ் என்று இல்லாமல் பிற மொழி படங்களும் தமிழ் டப்பிங் அல்லது சப்டைட்டிலுடன் இடம்பெறுகிறது. எனவே திரையரங்கை காட்டிலும் ஓடிடியில் படங்களை பார்ப்பது பலரது விருப்பமாகவே மாறியுள்ளது.

அந்த வகையில், தமிழ் ரசிகர்கள் அதிகமாக பார்க்கும் ஓடிடி தளங்களில் ஒன்றாக இருந்து வரும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் மிஸ் செய்யாமல் பார்க்கூடிய தரமான தமிழ் சினிமாக்கள் எவை என்பதை பார்க்கலாம்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இருக்கும் சூப்பர் ஹிட் தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

சித்தா

கடந்த ஆண்டில் சித்தார்த் நடிப்பில் வெளியான க்ரைம் த்ரில்லர் படம் சித்தா. பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்களை மையப்படுத்தி விழப்புணர்வை ஏற்படுத்தும் கதையாக அமைந்த இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து. சேதுபதி படத்தை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். த்ரில்லர் பட ரசிகர்களுக்கான விருந்தாக சித்தா படம் உள்ளது

விக்ரம்

உலகநாயகன் கமல்ஹாசனின் கம்பேக் படமாக இருந்த விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான விக்ரம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பியது. 2022இல் வெளிவந்த இந்த படத்தில் கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். அனிருத் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மிரட்டலாக அமைந்திருந்தன

கைதி

கார்த்தி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் 2019இல் வெளியான ஆக்‌ஷன் த்ரில்லர் படமான கைதி தமிழ் மொழியையும் கடந்த இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட படமாக உள்ளது. ஹீரோயின் இல்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் அமைந்திருக்கும் இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் உள்ளது. இதுவும் ஓடிடி படங்களில் டாப் 10 லிஸ்டில் உள்ளது

வட சென்னை

தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் 2018இல் வெளியான க்ரைம் ட்ராமா படம் வடசென்னை. அமீர், டேனியல் பாலாஜி, சமுத்திரகனி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்தின் நான் லீனியர் திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

வட சென்னை 2 பட ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கும் நிலையில், நார்த் செண்ட்ரல் என்ற பெயர் இந்த படம் வட இந்தியா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

உறியடி

அறிமுக இயக்குநர் விஜய குமார் இயக்கி, நடித்த இந்த படம் அரசியல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக அமைந்தது. 1990 காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவமும், அதில் நிகழ்ந்த அரசியலையும் பின்னணியாக கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 2016இல் வெளியான இந்த படம் தற்போது ஓடிடியிலும் மொழிகளை கடந்து பலரால் பார்த்து ரசிக்ககூடிய படமாக இருந்து வருகிறது.

காக்கா முட்டை

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இரண்டு சிறுவர்கள் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க எம். மணிகண்டன் இயக்கத்தில் 2015இல் வெளியான படம் காக்கா முட்டை. சென்னையில் சேரி பகுதியில் வசிக்கும் சிறுவர்களின் வாழ்க்கை, பீட்சா சாப்பிட வேண்டும் என்கிற அவர்களின் ஆசையை மையப்படுத்தி வெளியான இந்த படம் விமர்சக ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது. ஸ்டார்கள் இல்லாமல் கோடிகளில் வசூலித்த இந்த படம் உலகம் போற்றும் தமிழ் சினிமாவாக உள்ளது.

ஜிகர்தண்டா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் கேங்ஸ்டர் த்ரில்லர் படமாக 2014இல் வெளியானது ஜிகர்தண்டா. படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, மேக்கிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. சந்தோஷ் நாரயணன் இசையில் பாடல்கள், பின்னணி இசையும் சம்பவம் செய்தன.

இந்தி, தெலுங்கு, கன்னடா மொழிகில் ரீமேக் செயப்பட்ட தமிழ் படமாக இருந்து வரும் ஜிகர்தண்டா அதிகம் பேரல் ரிப்பீட் மோடில் பார்த்து ரசிக்கும் படமாக இருந்து வருகிறது.

ஆரண்ய காண்டம்

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் 2010இல் வெளியான கேங்ஸ்டர் படம் ஆரண்ய காண்டம். சம்பத் ராஜ், ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா, யாஸ்மின் பொன்னப்பா உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் பல கதைகள் இணைந்த படமாக உள்ளது.

ரிலீசின்போது பெரிதாக வரவேற்பை பெறாத போதிலும், தற்போது கல்ட் கிளாசிக் அந்தஸ்தை பெற்று பலரால் தேடி பிடித்து மீண்டும் மீண்டும் பார்க்கும் படமாக உள்ளது. பாடல்கள் இல்லாத இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையில் தரமான சம்பவம் செய்திருப்பார்

இது தவிர செல்வராகவன் சூப்பர் ஹிட் கல்ட் கிளாசிக் படங்களான புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி படங்களும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.