தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Selvaraghavan: கேர்ள் ஃப்ரண்ட மறக்க முடியலையா?.. இத செய் எல்லாம் பறந்து போயிரும் - செல்வராகவன் அட்வைஸ்!

Director Selvaraghavan: கேர்ள் ஃப்ரண்ட மறக்க முடியலையா?.. இத செய் எல்லாம் பறந்து போயிரும் - செல்வராகவன் அட்வைஸ்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 10, 2024 06:34 PM IST

Director Selvaraghavan: “நாம் நம் கடந்த காலம் குறித்து யோசிப்பதை நிறுத்திவிட்டால், நம்முடைய மனசாட்சி அப்படியே அமைதியாகி விடும். நான் ஏன் கடந்த காலத்தை பற்றி சொல்கிறேன் என்றால்” - செல்வராகவன் அட்வைஸ்!

Director Selvaraghavan: கேர்ள் ஃப்ரண்ட மறக்க முடியலையா?.. இத செய் எல்லாம் பறந்து போயிரும் - செல்வராகவன் அட்வைஸ்!
Director Selvaraghavan: கேர்ள் ஃப்ரண்ட மறக்க முடியலையா?.. இத செய் எல்லாம் பறந்து போயிரும் - செல்வராகவன் அட்வைஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வீடியோவில், இந்த கணத்தில் இருப்பது குறித்தான முக்கியத்துவதை பகிர்ந்து இருக்கிறார்.அதில் அவர் பேசும் போது, “ நம்முடைய வாழ்க்கையில், நம்முடைய மனதை சுடுகாடாக மாற்றுவது, நம்மை சந்தோஷம் இல்லாமல் வைப்பது உள்ளிட்டவையெல்லாம் எதையாலோ நடக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். 

கடந்த காலம் வேண்டாமே

அப்படியில்லை, நாம் நம் கடந்த காலம் குறித்து யோசிப்பதை நிறுத்திவிட்டால், நம்முடைய மனசாட்சி அப்படியே அமைதியாகி விடும். நான் ஏன் கடந்த காலத்தை பற்றி சொல்கிறேன் என்றால், நம்முடைய வாழ்க்கையின் பெரும்பான்மையான நேரங்களில் கடந்த காலத்தை பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறோம். கடந்த கால நிகழ்வுகளை பொறுத்தவரை அதன் நினைவுகள் நிகழ்காலத்தில் பெரிய விஷயமாக நமக்கு தெரியும். 

கடந்த காலத்தை நினைப்பதில் இருக்கும் பிரச்சினை அதுதான். அதிலிருந்து வெளியே வருவதற்கு நான் ஒரு டெக்னிக்கை சொல்கிறேன். எப்போதெல்லாம் உங்களுக்கு கடந்த கால நினைவுகள் வருகிறதோ.. அப்போதெல்லாம், இப்போது.. இப்போது.. என்ற எண்ணத்தை ஆழமாக நினைத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதில் அது உங்கள் கவனத்தை செலுத்த வைக்கும். 

அது உங்களை நிகழ்காலத்திற்கு அழைத்து வரும். ஆரம்பத்தில் இது கொஞ்சம் கடினமாக இருப்பது போல இருக்கலாம். ஆனால் கொஞ்சம் பழக பழக கைவசப்பட்டு விடும். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்யும் போது ஒரு நிம்மதியான வாழ்க்கையை பார்ப்பீர்கள்” என்று பேசினார்.

செல்வராகவனுடன் காதல் உருவானது எப்படி என்பது குறித்து அவரது மனைவியான கீதாஞ்சலி செல்வராகவன், கடந்த 1 வருடத்திற்கு முன்னதாக சினி உலகம் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அந்த பேட்டி இங்கே.

இது குறித்து அவர் பேசும் போது, “செல்வாதான் என்னிடம் முதலில் ஐ லவ் யூ சொன்னார். அவருக்கு தன்னுடைய உணர்ச்சிகளை மூடி மறைக்கத் தெரியாது.

நாங்கள் ஒரு முறை ஹைதராபாத்திற்கு சென்று இருந்தோம். 3 நாட்கள் என்று திட்டமிட்ட பயணம் 15, 20 நாட்கள் நீண்டது. நான் ஆடைகள் எடுத்து வராத காரணத்தால், கடைக்குச் சென்று ஆடைகள் வாங்கி வருவதாக செல்வாவிடம் சொன்னேன்.

உடனே செல்வா நானும் வருகிறேன் என்றார். அவரைப் பார்த்து ஒளிப்பதிவாளர் ராம்ஜியும் வருகிறேன் என்று சொல்ல கடைசியில் உதவி இயக்குநர்கள் உட்பட அனைவரும் சென்றோம். கடையின் செண்ட் பாட்டில்கள் இருக்கும் பகுதிக்குள் சென்ற செல்வா, திடீரென்று என்னை அழைத்தார்.

சென்று பார்த்த போது, கையில் ஒரு செண்ட் பாட்டில் எடுத்து என் முகத்திற்கு நேராக நீட்டினார். அதில் மேரி மீ என்று எழுதி இருந்தது. அதை என்னிடம் காண்பித்து இதில் இருப்பது என்ன என்று கேட்டார். நான் மேரி மீ என்று சொன்னேன். அப்படியானால் என்னை திருமணம் செய்து கொள் என்று சொன்னார்.

இதனை பார்த்த ராம்ஜி மற்றும் உதவி இயக்குனர்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள். உடனே நான் அவரிடம் இது உண்மையா? என்று கேட்டேன். அவர் ஆமாம் என்றார். இதனையடுத்து அந்த செண்ட்பாட்டிலை வாங்கிக்கொண்டேன். தொடர்ந்து அம்மா, அப்பாவிடம் வந்து பேசுங்கள் என்றேன்” என்று பேசினார்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்