SPB Top Trending Songs : மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடகர்.. எஸ்பிபி பாடிய டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட் இதோ!-check out the list of spb top trending tamil songs - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Spb Top Trending Songs : மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடகர்.. எஸ்பிபி பாடிய டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட் இதோ!

SPB Top Trending Songs : மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடகர்.. எஸ்பிபி பாடிய டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட் இதோ!

Divya Sekar HT Tamil
Sep 06, 2024 08:20 AM IST

SPB Top Trending Songs : கடந்த 50 ஆண்டுகளாக தமிழக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரைப்படப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய டாப் ட்ரெண்டிங் பாடல்களை இதில் பார்க்கலாம்.

SPB Top Trending Songs : மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடகர் எஸ்பிபி பாடிய டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட் இதோ!
SPB Top Trending Songs : மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடகர் எஸ்பிபி பாடிய டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட் இதோ!

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் தளபதி. மணிரத்னம் இப்படத்தை இயக்கினார். ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடப்பெற்ற பாடல் தான் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல். இப்பாடலை வாலி எழுதியுள்ளார். எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி இணைந்து பாடி இருப்பார்கள். இப்பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா.

சுத்தி சுத்தி வந்தீக

1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படையப்பா. கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடப்பெற்ற பாடல் தான் சுத்தி சுத்தி வந்தீக பாடல். இப்பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். எஸ். பி. பாலசுப்ரமணியம் & ஹரிணி இணைந்து பாடி இருப்பார்கள். இப்பாடலுக்கு இசையமைத்தவர் ஏ. ஆர். ரகுமான்.

காட்டுக்குயிலு மனசுக்குள்ள

1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் தளபதி. மணிரத்னம் இப்படத்தை இயக்கினார். ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடப்பெற்ற பாடல் தான் காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாடல். இப்பாடலை பி.கே.மிஸ்ரா எழுதியுள்ளார். எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.ஜே. யேசுதாஸ் இணைந்து பாடி இருப்பார்கள். இப்பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா.

முத்து மணி மாலை

992 ஆம் ஆண்டு ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சின்ன கவுண்டர். இதில் விஜயகாந்த், சுகன்யா, கவுண்டமணி முதலியோர் நடித்து உள்ளனர். இத்திரைப்படத்தைச் சின்னராயுடு என்ற பெயரில் தெலுங்கிலும் சிக்கெசமான்ரு என்ற பெயரில் கன்னடத்திலும் வேறு நடிகர்களைக் கொண்டு மீளுருவாக்கினார்கள். இத்திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல் தான் முத்து மணி மாலை பாடல். இப்பாடலை கங்கை அமரன் எழுதியுள்ளார். எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுசீலா இணைந்து பாடி இருப்பார்கள். இப்பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா.

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா

1993 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் பொன்னுமணி. ஆர். வி. உதயகுமார் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்திக், சௌந்தர்யா, சிவகுமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான இத்திரைப்படம் சிறப்பான வரவேற்பு பெற்ற வெற்றித் திரைப்படமாகும். இத்திரைப்படம் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படமாகும். இது ஆர். வி. உதயகுமார் - கார்த்திக் கூட்டணியின் இரண்டாவது வெற்றித் திரைப்படமாகும். இப்படத்தில் இடப்பெற்ற பாடல் தான் நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா. இப்பாடலை எஸ். பி. பாலசுப்ரமணியம் & ஜானகி இணைந்து பாடி இருப்பார்கள்.

ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி

1995-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படம் முத்து. இத்திரைப்படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்க, ரஜினிகாந்த், மீனா, ரகுவரன், சரத் பாபு, ராதாரவி, செந்தில் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடப்பெற்ற பாடல் தான் ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி பாடல். இப்பாடலை எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடி இருப்பார்.

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட

1992 இல் வெளிவந்த திரைப்படம் உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன். குரு தனபால் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் கார்த்திக், சசிகலா மற்றும் மோனிசா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை ஜீ. டி. ரமேஷ் தயாரித்திருந்தார். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல் தான் என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட பாடல். இப்பாடலை பிறைசூடன் எழுதியுள்ளார். எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதா இணைந்து பாடி இருப்பார்கள். இப்பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.