தேவர்மகன் கதையை திருடிய கமல் ஹாசன்! கதாசிரியர் கலைஞானத்தை எப்படி சரிக்கட்டினார்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தேவர்மகன் கதையை திருடிய கமல் ஹாசன்! கதாசிரியர் கலைஞானத்தை எப்படி சரிக்கட்டினார்?

தேவர்மகன் கதையை திருடிய கமல் ஹாசன்! கதாசிரியர் கலைஞானத்தை எப்படி சரிக்கட்டினார்?

Suguna Devi P HT Tamil
Nov 11, 2024 10:56 AM IST

நடிப்பு, இசை, நடனம், எழுத்து, அரசியல் என எல்லாத் துறைகளிலும் சகலகலா வல்லவனாக இருந்து வரும் நடிகர் கமல்ஹாசன் மீதும் இந்த கதை திருட்டு குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேவர்மகன் கதையை திருடிய கமல் ஹாசன்! கதாசிரியர் கலைஞானத்தை எப்படி சரிக்கட்டினார்?
தேவர்மகன் கதையை திருடிய கமல் ஹாசன்! கதாசிரியர் கலைஞானத்தை எப்படி சரிக்கட்டினார்?

கமல் ஹாசனின் மைல்கல்

 நடிகர் கமல்ஹாசனின் வாழ்க்கையில் பெரும் மைல்கல்லாக இருந்த படங்களில் ஒன்றாக உள்ளது தேவர் மகன், இப்படத்தின் கதை வேறு ஒருவரின் கதை எனவும் கூறப்படுகிறது. இப்படம் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றது. மேலும் இப்படத்தின் கதை மிகவும் அழுத்தமாகவும் தென் மாவட்டங்களில் நிலவும் சாதிய சமூக நிலைமையையும் எடுத்துக் கூறியிருந்தது. இப்படத்தினை இயக்குனர் பரதன் இயக்கியிருந்தார். மேலும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை கமல்ஹாசனே எழுதி இருந்தார். 

தற்போது வரும் இயக்குனர்களும் இப்படத்தினை ஒரு முன்மாதிரியாக வைத்து படம் இயக்குகின்றனர். அந்த அளவிற்கு படத்தின் கதை அம்சமும் திரை கதையும் வசனங்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்திற்கான கதையை கமல்ஹாசனே எழுதியுள்ளதாக அவர் கூறியிருப்பார் இந்த படத்தின் கதை எழுதியது குறித்தும் பல பேட்டிகளில் விரிவாக தெரிவித்து இருந்தார்.

திருட்டுக்கதை 

இப்படி இந்த கதைக்கு முண்டியடித்து பெயர் போட்டுக் கொள்ளும் கமல் ஹாசன் இந்த கதையை எழுத வில்லையாம். ஏனென்றால் தேவர் மகன் படத்திற்கு முன்னர் கமல்ஹாசன் நடித்து வெளியான குணா படம் தோல்வி அடைந்ததால் பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்காக கங்கை அமரனிடம் கதை கேட்டு அந்த கதை தான் இந்த தேவர் மகன் எனவும் அதற்கு அதிவீரபாண்டியன் என பெயர் வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கான கதை கதாசிரியர் கலைஞானத்தினுடையது எனவும் கூறப்படுகிறது. 

இது குறித்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு கதாசிரியர் கலைஞானம் தேவர் மகன் படத்தின் கதை தன்னுடையது எனவும் இப்படத்தை எடுத்து முடித்த பின்பு உங்களது கதையை உங்கள் தம்பி எடுத்துக் கொள்கிறாராம் என ஒருவர் வந்து தெரிவித்து இருந்ததாகவும் ஒரு சமூக ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். குறிப்பாக இப்படத்திற்கு கமல்ஹாசன் அதிக பணம் தருவதாகவும் கூறி 20 ரூபாய் நோட்டுகளை வைத்து மொத்தமே வெறும் ரூ.25 ஆயிரம் மட்டும் தனக்கு கொடுத்ததாகவும் அந்த பேட்டியில் கலைஞானம் தெரிவித்து இருந்தார். இந்திய சினிமாவின் பெரும் அடையாளமாக கருதப்படும் கமல்ஹாசனின் வாழ்க்கையில் ஒரு பெரும் மைல்கள்ளாக இருந்த தேவர் மகன் திரைப்படம் ஒரு திருடப்பட்ட கதை என்பது மோசமான செயலாகும். இப்படத்தின் கதை கங்கை அமரனின் கதை எனவும் கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றன. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.