புஸ்ஸி ஆனந்தின் அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சு.. விஜய் என்ன முடிவு எடுக்கவேண்டும்.. வலைப்பேச்சு அந்தணன் அதிரடி கருத்து
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  புஸ்ஸி ஆனந்தின் அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சு.. விஜய் என்ன முடிவு எடுக்கவேண்டும்.. வலைப்பேச்சு அந்தணன் அதிரடி கருத்து

புஸ்ஸி ஆனந்தின் அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சு.. விஜய் என்ன முடிவு எடுக்கவேண்டும்.. வலைப்பேச்சு அந்தணன் அதிரடி கருத்து

Marimuthu M HT Tamil
Oct 06, 2024 10:48 AM IST

புஸ்ஸி ஆனந்தின் அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சு.. விஜய் என்ன முடிவு எடுக்கவேண்டும்.. வலைப்பேச்சு அந்தணன் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

புஸ்ஸி ஆனந்தின் அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சு.. விஜய் என்ன முடிவு எடுக்கவேண்டும்.. வலைப்பேச்சு அந்தணன் அதிரடி கருத்து
புஸ்ஸி ஆனந்தின் அரசியல் முதிர்ச்சியற்ற பேச்சு.. விஜய் என்ன முடிவு எடுக்கவேண்டும்.. வலைப்பேச்சு அந்தணன் அதிரடி கருத்து

இதுதொடர்பாக பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் ஆகாயம் தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் பற்றிப் பார்க்கலாம். 

’’விஜய் நடத்தும் மாநாடு மீது வரும் விமர்சனங்களுக்கு அவர் அறிக்கை மூலம் பதிலளித்திருந்தார். இதுபற்றி உங்கள் பார்வை?’’

’’விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டினை நடத்தினால் சந்தோஷம் தான். மீடியாக்கள் தான் மழைக்காலத்தில் விஜய் மாநாடு நடத்தமுடியுமா என அக்கறையில் கேட்டது. இன்னொரு பக்கம், உங்கள் போர்ப்படை தளபதியாக வைத்திருப்பவர்களே கட்சிக்கு குழி தோண்டுவதுபோல் பேசி வருவது, விஜய்யின் இமேஜை பாதிக்கின்றதே என்று தான் கேள்வி எழுப்பியது. அப்போது த.வெ.க.வுக்கு சரியான நபர்களை வையுங்கள் என பத்திரிகையாளர்கள் பலர் ஆலோசனை சொன்னோம். 

’விஜய் பத்திரிகையாளர்கள் கருத்துகளை பாஸிட்டிவ் ஆக பார்க்க வேண்டும்’:

இரண்டையுமே பாஸிட்டிவ் ஆக பார்த்தால் விஜய் இந்த அறிக்கை கடிதம் அனுப்பத் தேவையில்லை. ஒரு வேளை பொதுவாக, அவர் எதிர்க்கட்சிகளுக்குக் கூட இந்த கேள்வியைக் கேட்கலாம். மேலும் திமுக கூட காவல்துறையினரை ஏவிவிட்டு, இந்த மாநாட்டிற்குப் பல்வேறு தடைகளை உருவாக்க முயல்வதாகத் தெரிகிறது. அவர்களுக்கு இவர் பதில் சொல்கிறாரா என்று தெரியவில்லை. விஜய் மாநாட்டை சிறப்பாக நடத்தினால் சந்தோஷம் தான். சந்தர்ப்பவாத அரசியலையே தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் செய்துகொண்டு இருக்கிறது. நன்மைகளும் செய்திருக்கிறது. தீமைகளும் செய்திருக்கிறது. அப்போது விஜய் கட்சி தொடங்குவதாக அறிவித்து இத்தனை நாட்களில் என்ன செய்திருக்கிறார் என்பது எல்லோர் மத்தியிலும் ஒரு அதிருப்தியாக இருக்கிறது. அதுதான் இப்படி சில கேள்விகளைப் பலர் எடுக்க வைக்கிறது’’.

’’புஸ்ஸி ஆனந்த் குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் பரவிக்கொண்டே இருக்கிறது. அதை சரிசெய்யத்தான் விஜய், தன் மாநாட்டை சிறப்பாக நடத்துவோம் என்ற அறிக்கைக்கு காரணமா?’’

’’புஸ்ஸி ஆனந்தைக் காப்பாற்றுவது விஜய்யின் வேலை கிடையாது. சர்ச்சைகள் வந்தது என்றால், அவர் இடத்தில் பொருத்தமான நபரை போடுங்க. அறிவுப்பூர்வமாகப் பேசினால் நாம் முதல் வரிசையில் உட்கார்ந்து கைதட்டுவோம். தவறாக ஒருத்தர் பேசுறார். அவருக்கு அரசியல் தெளிவு இல்லை. என்ன பேசுறோம் அப்படிங்கிற உணர்வே இல்லாமல் ஒருவர் மக்கள் மத்தியில் உளறிக்கொண்டு இருக்கிறார் என்பதைத்தான் நாம் சொல்கிறோம். அது உங்களுக்குப் பெரிய இழுக்கு ஆக இருக்கிறது என்று நாம் சொல்கிறோம். அதைச் சரி செய்யுங்க. அதற்காக புஸ்ஸி ஆனந்த்தை போகச் சொல்லவில்லை. 

அவரை அருகிலேயே வைத்துக்கொள்ளுங்கள். இருந்தாலும், நல்ல ஒரு பொதுச்செயலாளரை நியமியுங்கள். ஜெயலலிதா அம்மா இருந்தாங்க. அவங்க எல்லாம் எந்தவொரு விமர்சனமும் வந்திடக்கூடாது அப்படின்னு ரொம்ப கவனமாக இருப்பாங்க. புஸ்ஸி ஆனந்த் பேசும்போது வேலை ஒரு பெரிய விஷயம் கிடையாது. அதைவிட்டுட்டு மாநாடுக்கு வந்திடுங்க. தளபதி பார்த்துக்கொள்வார் எனச் சொல்வது ஒரு தவறான வழிநடத்துதல். 

விஜய் ரெடின்னு சொன்னால், மலையில் இருந்து குதிக்கச் சொன்னால் பலர் தயாராக இருக்காங்க. அவங்க கிட்ட வேலையைவிட்டுட்டு வாங்க அப்படின்னு சொன்னால், வேலையை விட்டுட்டுத்தான் வருவாங்க. விஜய் காப்பாத்துவாரா என்ன?. துணிவு பட கொண்டாட்டத்தின்போது ஒரு ரசிகர் இறந்துட்டார். அவங்க குடும்பத்துக்கு அஜித் போய் பணம் கொடுத்திட்டாரா என்ன. எல்லா ரசிகர்களையும் விஜய்யால் பார்க்கமுடியாது. நாமும் பாருங்கள் என்று சொல்லவும் முடியாது. 

அப்படி தவறாகப் பேசும் நபரை சரியாகப் பேச விஜய் சொல்ல வேண்டும். வாரிசு அரசியலில் பெரிய உடன்பாடு கிடையாது. இருந்தாலும், உதயநிதிக்கு அறிவாலயத்தில் திராவிட இயக்கங்கள் பற்றி வகுப்பு எடுக்கப்பட்டது. பேசுவது பற்றி வகுப்பு எடுக்கப்பட்டது. உங்கள் பொதுச்செயலாளருக்கு அப்படி பயிற்சி எடுங்க. நாஞ்சில் சம்பத், பழ. கருப்பையா மற்றும் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் பல தலைவர்கள் இருக்காங்க. அவர்களை அழைத்து வந்து புஸ்ஸி ஆனந்துக்கு வகுப்புகள் எடுக்க வைக்கலாம். பொதுமக்கள்கிட்ட உளறாதீங்கன்னு தான் சொல்றோம்’’- என வலைப்பேச்சு அந்தணன் தனது கருத்தினை தெரிவித்தார். 

 நன்றி - ஆகாயம் தமிழ்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.