திகைக்க வைத்த திறமை.. வீடு தேடி வந்த விஜய்.. சுமந்த வலி கொஞ்சமா என்ன? - வினோத் விருட்சமான கதை!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  திகைக்க வைத்த திறமை.. வீடு தேடி வந்த விஜய்.. சுமந்த வலி கொஞ்சமா என்ன? - வினோத் விருட்சமான கதை!

திகைக்க வைத்த திறமை.. வீடு தேடி வந்த விஜய்.. சுமந்த வலி கொஞ்சமா என்ன? - வினோத் விருட்சமான கதை!

Oct 07, 2024 02:13 PM IST Kalyani Pandiyan S
Oct 07, 2024 02:13 PM , IST

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும்  ‘தளபதி 69’ படத்தை இயக்கி வரும் வினோத் கடந்து வந்த பாதையை இங்கே பார்க்கலாம். 

அஜித்தை வைத்து மூன்று படங்களை இயக்கிய இவருக்கு, தற்போது நடிகர் விஜயின் கடைசி படத்தை இயக்கும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருந்தாலும், இவரின் கல்ட் கிளாசிக்காக இன்றும் பார்க்கப்படுவது இவர் இயக்கிய ‘சதுரங்க வேட்டை’ திரைப்படம்தான். 

(1 / 6)

அந்தப்படத்தில் இவர் மீது விழுந்த வெளிச்சம்தான், இன்று இவரை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது. அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து கடந்த 1 வருடத்திற்கு முன்னதாக, தமிழ் சினிமா ரிவியூ சேனலுக்கு இவர் பேட்டிக்கொடுத்திருந்தார். அந்த பேட்டியை இங்கே பார்க்கலாம்.

(2 / 6)

அதில் அவர் பேசும் போது, “ நான் ஒன்றரை வருடங்களாக இயக்குநர் பார்த்திபனுடன் உதவி இயக்குநராக வேலை செய்தேன்.. அங்கு வேலை பார்த்த போது, எனக்கு சினிமா செட் ஆகாது என்று தோன்றியது. இதனையடுத்து, சினிமாவை கைவிட்டு விட்டு, சின்ன சின்ன நிறுவனங்களில் வேலை செய்தேன். அப்போதும், எனக்கு சினிமாவுக்குள் செல்ல வேண்டுமா? இல்லை வேண்டாமா என்ற குழப்பம் நீடித்துக் கொண்டே இருந்தது. பார்த்த வேலைகளும் பெரிதாக செட் ஆகவில்லை. அந்த சமயத்தில்தான் என்னுடைய நண்பர் ஒருவர், கோயம்பேடு மார்க்கெட்டில் காண்ட்ராக்டராக வேலை செய்தார்.

(3 / 6)

கோயம்பேடு மார்க்கெட்டில் வேலைஇதனையடுத்து அவருடன் சென்று நான் வேலை செய்தேன். அப்போதுதான் எனக்கு எழுத்தாளரும், இயக்குநருமான ராஜமுருகன் அறிமுகமானார். அவர் அப்போது ‘சந்திரபாபு’ என்ற ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 10 நாட்கள் அந்தப்படத்தின் ஷூட்டிங் நடந்தது. அதில் நான் அவருடன் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். ஆனால், சில காரணங்களால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது.

(4 / 6)

கோலி சோடாவில் உருவான சதுரங்க வேட்டைஉனக்கு கோயம்பேடு பற்றி நன்றாகத் தெரியுமல்லாவா? அவருக்கு உதவி செய் என்றார். அதன்படி, நான் அவருக்கு சில கோயம்பேட்டில் சில லொகேஷன்களை காண்பித்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இதையடுத்து அந்த படத்தில் அவர் என்னை எனக்கு உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டார். இதனையடுத்து என்னிடம் இருக்கும் கதையை தயாரிப்பாளர்கள், நடிகர்களிடம் சொல்லபல பேரிடம் என்னை பரிந்துரை செய்தார். ‘கோலி சோடா’ திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் கதையை கொஞ்சம் கொஞ்சமாக ரெடி செய்து கொண்டிருந்தேன்.

(5 / 6)

இதற்கிடையே ஒரு நாள், விஜய் ஆண்டனியிடம் கதை சொல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது; நீ தயாராக இருந்து கொள் என்றார். அவருக்கு சொல்வதற்காக என்னிடம் இருந்த சீன்களை இரண்டு நாட்களில் தொகுத்து எழுதிய கதைதான் சதுரங்க வேட்டை. அப்போது நான் அதன் இரண்டாம் பாதியில், பெரிதாக வேலை பார்க்கவில்லை. அவருக்கும் இரண்டாம் பாதியில் பெரிதாக உடன் பாடில்லை. இந்த நிலையில் அதனை நான் மீண்டும் எழுதினேன். இறுதியாக அது மனோபாலா சார் கைக்குச் சென்றது. ‘சதுரங்க வேட்டை’ உருவானது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்