ராதே ஷ்யாமை முந்திய கங்குவா! எதில் தெரியுமா? பரிதாப நிலையில் கோலிவுட்!
தெலுங்கு திரையுலகில் இருந்து பான் இந்தியா படமான ராதே ஷ்யாமை விட தமிழில் சமீபத்தில் வெளியான கங்குவா முந்தியுள்ளது. என்ன என்று தெரிந்துக் கொள்ள முழுமையாக படியுங்கள்.
இந்தியாவில் முன்பில் இருந்தே பல படங்கள் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியானாலும், தெலுங்கில் வெளியான பாகுபலி முதல் பாகமே அதிகாரப்பூர்வமாக வெளியான பான் இந்தியா படமாகும். 2015 இல் வெளியான பாகுபலி தி பிகினிங் திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து கன்னடத்தில் கே.ஜி.எஃப் படமும் இரண்டு பாகங்களாக வெளியிட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வெளுத்து வாங்கியது. குறிப்பாக இந்த இரு படங்களை அடுத்து எடுக்கும் எல்லா படங்களும் பான் இந்தியா படங்கள் என பிராண்ட் செய்து வெளியீடும் வழக்கம் உருவானது. இந்த அளவிற்கு இந்தப் படங்களின் வெற்றி உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
பான் இந்தியா ஸ்டாரான பிரபாஸ்
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்த அனைத்து படங்களும் பான் இந்தியா படமாக வெளியாகத் தொடங்கியது. இருப்பினும் எந்த படமும் பாகுபலி படத்திற்கு சமமாக கூட வசூல் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலிக்கு பின்னர் வெளியான சாஹோ திரைப்படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான ராதே ஷ்யாம் தான் மிகப்பெரிய பிரளயத்தை கொண்டு வந்தது. இயக்குனர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், யுவி கிரியேசன் தயாரிப்பில் உருவான இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்திற்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கே பல இசையமைப்பாளர்கள் இசையமைத்து இருந்தனர். பாடல்களை ஜஸ்டின் பிரபாகரனும், பின்னணி இசையை தமனும் என இசையமைத்து இருந்தனர். படத்தில் பல கிராபிக்ஸ் காட்சிகள் பெரும் பொருட்செலவில் செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்டன.
பாக்ஸ் ஆபிஸ் தோல்வி
இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்று இந்தி உட்பட பல மொழிகளில் ராதே ஷ்யாம் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் ரூ. 350 கோடி வரை செலவிடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்தப் படம் வெளியாகி சுமார் ரூ.200 கோடி மட்டுமே வசூல் ஆகி இருந்தது. இந்தியாவில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் தோல்வி அடைந்த படங்களின் வரிசையில் ராதே ஷ்யாம் படமும் இணைந்தது. குறிப்பாக இந்த படத்திற்கு மொத்தமாக ரூ.170 கோடி வரை நஷ்டம் அடைந்தது.
தற்போது இந்த வரிசையில் தமிழில் வெளியான கங்குவா திரைப்படம் ராதே ஷ்யாம் திரைப்படத்தை தாண்டியும் அதிக நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கங்குவா படம் வெளியாகி எட்டு வார இறுதி ஓட்டத்திற்குப் பிறகு, படம் ரூ.64.30 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது, இது அதன் மிகப்பெரிய ரூ.300 கோடி பட்ஜெட்டை நெருங்கவில்லை. சூர்யாவின் கங்குவா, ஒரு காலத்தில் சினிமாக் காட்சியாகப் பேசப்பட்டது, இப்போது பாக்ஸ் ஆபிஸில் ஒரு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்