தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Blue Sattai Maaran: ‘ரஹ்மானுக்கு கூஜா..வீராவேச உபதேசங்கள்’ - இயக்குநரை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்

Blue Sattai Maaran: ‘ரஹ்மானுக்கு கூஜா..வீராவேச உபதேசங்கள்’ - இயக்குநரை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்

Aarthi V HT Tamil
Sep 13, 2023 10:35 AM IST

ப்ளூ சட்டை மாறன் ட்விட்டர் பதிவி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இயக்குநரை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்
இயக்குநரை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் இயக்குநர் தங்கர் பச்சான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

அவர் பதவில், “ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அலைக்கழிக்கப்பட்டிருக்கும் மக்கள் கட்டுக்கடங்காத கோபத்தில் கிளர்ந்து எழுவதைக் காண முடிகிறது. தனிப்பட்ட முறையில் தங்களுக்கு சிக்கல் வந்தால் மட்டுமே கொதித்து எழும் மக்கள் பொது மக்களின் நலனுக்கான போராட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும்.

இத்தகைய அறச்சீற்றம் பொதுப் போராட்டங்களிலும் உருவானால் அரசியல் கட்சிகளை மட்டுமே நாம் நம்பி இருக்க வேண்டியதில்லை!

இது போன்ற நிகழ்வுகளை மட்டும் பணமாக்க நினைக்கும் ஊடகங்கள் மக்களிடத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறி விடுகின்றன. மக்களும் பொது நல சிந்தனையின்றி கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுகின்றனர்.

மக்களும் ஊடகங்களும் மனது வைத்தால் மட்டுமே அனைத்து மாற்றங்களும் நிகழும்! அதுவரை வெறும் புலம்பலிலேயே மக்கள் வாழ்வு முடிந்து போகும்” என குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ப்ளு சட்டை மாறன் தனது பதவில், 'மறக்குமா நெஞ்சம்' கொடுமைகள் பற்றி பல்வேறு வீடியோக்கள் ஆதாரத்துடன் வெளிவந்தன. பெண்கள், முதியவர்கள் உட்பட பலரும் தாங்கள் கடும் இன்னலுக்கு ஆளானதை கூறினர்.

ஆனால் திரைத்துறையை சார்ந்த சிலர் அதைப்பற்றி பேசாமல் ரஹ்மானுக்கு கூஜா தூக்குகிறார்கள். இதை அவரே விரும்ப மாட்டார். தவறுக்கு தானும் பொறுப்பென நேற்றே கூறிவிட்டார். நீங்கள் ஏன் முரட்டு முட்டு தருகிறீர்கள்?

இப்படி பேசினால்.. அவர் உங்கள் படத்தில் இசையமைப்பார் என ஏதேனும் கணக்கு போடுகிறீர்களா?

ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்றது அமேசான் வாழ் அரிய வகை மக்களா அல்லது நிலாவில் வாழும் குடிமக்களா? தமிழர்கள் தானே?

நீங்கள் மக்களுக்காக எத்தனை போராட்டங்கள் நடத்தி.. தீர்வினை பெற்று தந்துள்ளீர்கள்? பெரும்பாலும் ஏசி அறையில்.. மைக் முன்பு பொங்குவதோடு சரி. இதனால் தான் பல ஆண்டுகளாக உங்கள் படங்கள் அனைத்தையும் மக்கள் புறக்கணித்து வருகிறார்கள் போல.

உங்கள் வீராவேச உபதேசங்களை நீங்களே வைத்து கொள்ளுங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசாதவர்களின் படங்களை பார்க்காமல் ஒதுக்கித்தள்ளுங்கள் மக்களே “ என குறிப்பிட்டு இருக்கிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்