டக்கர் அடித்தாரா பெக்கர்? தீபாவளி ரேஸில் எந்த இடம்? ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் முதல் விமர்சனம் இதோ!
பெரிய அளவில் பரிட்சையம் இல்லாத கதாபாத்திரங்கள் நிறைய இருந்தாலும், அனைவரும் கவினுடன் வருவதால், அவர்களும் அடையாளம் காணப்படுகிறார்கள். முழுக்க முழுக்க காமெடியை நம்மி மட்டுமே கதையை நகர்த்துகிறார்கள்.

தீபாவளி பந்தயத்தில் மற்றுமொரு எதிர்ப்பு கொண்ட திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. கவின் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் முதல் விமர்சனம் இதோ.
பங்காளி சண்டையில் எண்ட்ரி ஆகும் கவின்
பிச்சைக்காரராக வாழ்ந்து வரும் கவினுக்கு, நாம் மாளிகையில் வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அந்த நேரத்தில் நடிகர் ஒருவரின் பங்களாவில், எளியவர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள். அதில் பங்கேற்கும் கவினுக்கு, அந்த பங்களா வாழ்க்கைப் பிடித்துப் போகிறது. இதற்கிடையில் அந்த பங்களா உறவுகளிடையே சொத்துப் பிரச்னை போகிறது. 5 வாரிசுகள், தனித்தனியே சொத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள்.
உயில் மூலம் பெரும் பங்குகளை பெற்ற மகன் மட்டும் மாயமான நிலையில், அந்த மகனாக நடிக்க கவினை ‘புக்’ செய்கிறது அங்கிருக்கும் ஒரு பிரிவினர். அதற்கு குடும்ப வழக்கறிஞரும் உதவுகிறார். ஒரு கட்டத்தில் மற்றவர்களுக்கும் உண்மை தெரியவர, அனைவரும் சேர்ந்து கவினை தீர்த்துக்கட்டி, சொத்தை தங்கள் வசமாக்க முடிவு செய்கிறார்கள். அந்த பணக்காரக் குடும்பத்தின் சதித்திட்டத்திலிருந்து, தப்பித்தாரா? சிக்கினாரா? இல்லை, அவர்களுக்கு பதிலடி கொடுத்து, மாளிகையை ஆண்டாரா? என்பது தான் ப்லடி பெக்கர்.