Bigg Boss 8 : அடேங்கப்பா.. இவங்க எல்லாம் பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்ள போறாங்களாம்.. அப்போ ஆட்டம் சூடு பிடிக்க போகுது!-bigg boss tamil season 8 proposed contestants list as per reports - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 8 : அடேங்கப்பா.. இவங்க எல்லாம் பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்ள போறாங்களாம்.. அப்போ ஆட்டம் சூடு பிடிக்க போகுது!

Bigg Boss 8 : அடேங்கப்பா.. இவங்க எல்லாம் பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்ள போறாங்களாம்.. அப்போ ஆட்டம் சூடு பிடிக்க போகுது!

Divya Sekar HT Tamil
Sep 26, 2024 08:06 AM IST

Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ல் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் இறுதி லிஸ்ட் இதுதான் என தற்போது தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் பெயர் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

Bigg Boss 8 : அடேங்கப்பா.. இவங்க எல்லாம் பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்ள போறாங்களாம்.. அப்போ ஆட்டம் சூடு பிடிக்க போகுது!
Bigg Boss 8 : அடேங்கப்பா.. இவங்க எல்லாம் பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்ள போறாங்களாம்.. அப்போ ஆட்டம் சூடு பிடிக்க போகுது!

கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்தது.

கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி

பின்னர் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதியை சேனல் தரப்பு புதிய ஆங்கராக களமிறக்கியுள்ளது. விஜய் சேதுபதிக்கு பொதுமக்கள் ஆலோசனை கூறுவதாக அமைந்த ப்ரமோ வீடியோ மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து டிரெண்ட் ஆனது.

விஜய் சேதுபதியின் ஆங்கரங்கில் இந்த நிகழ்ச்சி எப்படி அமையும் என்பது குறித்து ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த நிகழ்ச்சி துவங்க உள்ள நாள் மற்றும் நேரம் குறித்து தற்போது விஜய் டிவி அறிவித்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக துவங்க உள்ளதாக விஜய் டிவி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் நிகழ்ச்சி சிறப்பாகவே களைக்கட்டும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த சீசனிலேயே 2 பிக் பாஸ் வீடுகள் என அடுத்தடுத்து வித்தியாசத்தை காட்டிய இந்த நிகழ்ச்சி, இந்த சீசனில் எந்த மாதிரியான வித்தியாசங்களுடன் ரசிகர்களை சந்திக்கும் என்று எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ல் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் லிஸ்ட்

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ல் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் இறுதி லிஸ்ட் இதுதான் என தற்போது தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் பெயர் விவரங்கள் வருமாறு. வெளியான தகவல்களின்படி பிக் பாஸ் 8 உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட்.

பவித்ரா ஜனனி (சீரியல் நடிகை)

அன்ஷிதா (செல்லம்மா சீரியல் நடிகை)

வினோத் பாபு (சீரியல் நடிகர்)

ரஞ்சித் (பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்)

குரேஷி (விஜய் டிவி காமெடியன்)

அருண் பிரசாத் (பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்)

அமலா ஷாஜி (ஆன்லைன் பிரபலம்).

சம்யுக்தா விஸ்வநாதன் (கட்சி சேர பாடல் புகழ் நடிகை).

செந்தில் (காமெடியன்)

ஷாலின் ஸோயா (குக் வித் கோமாளி பிரபலம்)

ரியாஸ் கான் (நடிகர்)

பூனம் பஜ்வா (கவர்ச்சி நடிகை)

ஜெகன் (காமெடி நடிகர்)

ப்ரீத்தி முகுந்தன் (கவின் உடன் ஸ்டார் படத்தில் நடித்தவர்)

டிடிஎப் வாசன் (பைக் ரைடு சர்ச்சை பிரபலம்).

ஜாக்குலின் (விஜய் டிவி முன்னாள் தொகுப்பாளர்)

ரவீந்தர் சந்திரசேகர் (தயாரிப்பாளர்)

ஆனால் இவர்கள் தான் உறுதியான பிக்பாஸ் போட்டியாளர்களா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த ஊகங்கள் உண்மைதானா என்பதைப் பார்க்க பார்வையாளர்கள் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.