Actress Sivaranjani: “கமல் பாம்ப கன்னத்துல நக்க விட்டுட்டார்.. உடம்பே ஆடி போயிருச்சு’ - சிவரஞ்சனி பேட்டி
Actress Sivaranjani: அந்தப் பாடலின் பொழுது நான் மேக்கப் ரூமில் இருந்தேன். அப்போது உள்ளே வந்த மேக்கப் மேன், ரெடியா மேடம் என்றார். கூடவே, படப்பிடிப்பிற்கு பாம்பு வந்திருக்கிறது என்று கூறினார். உடனே என்ன பாம்பா..? என்று பயந்த நான், ரூமை உள்ளிருந்து பூட்டிக் கொண்டு வெளியே வரவில்லை.- சிவரஞ்சனி
Actress Sivaranjani: நடிகர் கமல்ஹாசன், நடிகை சிவரஞ்சனி உள்ளிட்ட பலரது நடிப்பில், இயக்குநர் ஜி பி விஜய் இயக்கத்தில், கடந்த 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் கலைஞன். இந்தப்படத்தில் இடம் பெற்ற ‘கொக்கரக்கோ’பாடலில் கமல்ஹாசனும், சிவரஞ்சினியும் இணைந்து பாம்புடன் நடனம் ஆடியிருப்பார்கள். அந்த அனுபவம் பற்றி நடிகை சிவரஞ்சினி அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
பயந்து ரூமுக்குள் முடங்கி விட்டேன்
இது குறித்து அவர் பேசும் போது, “அந்தப் பாடலின் பொழுது நான் மேக்கப் ரூமில் இருந்தேன். அப்போது உள்ளே வந்த மேக்கப் மேன், ரெடியா மேடம் என்றார். கூடவே, படப்பிடிப்பிற்கு பாம்பு வந்திருக்கிறது என்று கூறினார். உடனே என்ன பாம்பா..? என்று பயந்த நான், ரூமை உள்ளிருந்து பூட்டிக் கொண்டு வெளியே வரவில்லை.
கமல் சார்தான் எனக்கு பாம்பை பழக்கினார்
இதையடுத்து கமல் சார் ஹீரோயின் எங்கே காணவில்லை என்று கேட்க, மேக்கப் மேன் படப்பிடிப்பிற்கு பாம்பு கொண்டு வந்திருப்பதை தெரிந்து கொண்டு, பயத்தில் படப்பிடிப்பிற்கு வர மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார். இதையடுத்து என்னை சமாதானம் செய்த கமல்ஹாசன், பாம்பு மிகவும் பாவம். நாம் ஏதாவது செய்தால் தான் அது உஷ்.. உஷ்..என்று ஏதாவது செய்யும் என்று பேசி, பேசி பாம்பு குறித்தான பயத்தை போக்கினார். கிட்டத்தட்ட எனக்கு அவர் 5 நிமிடங்கள் கவுன்சிலிங் கொடுத்தார். அப்படி பேசி பேசி தான் அந்தப் பாம்புடன் என்னை நடிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் நானும் நடிக்க ஒத்துக்கொண்டேன்.
அந்தப்பாடலில் அந்தப்பாம்பை என் தோளில் போடுவார்கள். அது என் உடம்பில் நெழிந்து, கன்னத்தில் வந்து நாக்கால் நக்கும். அப்பொழுது என் உடம்பெல்லாம் ஆடிப் போய்விட்டது. ஆனால் அந்த பாடலுக்கு பின்னர் எனக்கு பாம்பு குறித்தான பயமே போய்விட்டது. அதன் பின்னர் தெலுங்கு படம் ஒன்றில் நான் பாம்பு கதாபாத்திரமாகவே நடித்தேன்.
பாம்பை எடுத்து மடியில் போட்டுக்கொண்டேன்
அந்தப் படத்தில் பாம்பை எடுத்து என்னுடைய மடியில் வைத்துக் கொண்டேன். நான் ஷூட்டிங் போனாலே அது எனக்கு ஒரு செல்லப் பிள்ளையாக மாறிவிட்டது. அதை நான் கொஞ்சிக் கொண்டிருந்தேன். எல்லாமே கமல் சார் எனக்கு பழக்கிவிட்டதுதான். அதன் பின்னர் எனக்கு பாம்பை பார்க்கும் போதெல்லாம்... பாம்பு பாவமல்லவா என்று தோன்றும். நாம் ஏதாவது செய்தால் தானே அந்தப் பாம்பு நம்மை ஏதாவது செய்யும் என்ற புரிதல் அதன் பின்னர்தான் எனக்கு ஏற்பட்டது.” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்